Eye Drops : வெள்ளெழுத்து பார்வை குறைபாட்டை சரி செய்யும் சொட்டு மருந்து..இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தடை

Pres Vu Eye Drops License Cancel in India : வெள்ளெழுத்து பிரச்சினை உள்ளவர்கள் சொட்டு மருந்தை பயன்படுத்தினால் மூக்குக் கண்ணாடியே அணியத் தேவையில்லை என பிரஸ்வியூ நிறுவனம் விளம்பரம் செய்திருந்த நிலையில் அந்த பொருளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது.

Sep 12, 2024 - 12:33
Sep 12, 2024 - 12:44
 0
Eye Drops : வெள்ளெழுத்து பார்வை குறைபாட்டை சரி செய்யும் சொட்டு மருந்து..இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தடை
Pres Vu Eye Drops License Cancel in India

Pres Vu Eye Drops License Cancel in India : நாற்பது வயதை கடந்தவர்கள் கண்ணாடியை அவசியம் போட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பிரஸ்பியோபியா குறைபாடு காரணமாக புத்தகங்களில் உள்ள சிறிய எழுத்துகளை படிக்க முடியாது. வெள்ளெழுத்து பிரச்சினை உள்ளவர்கள் சொட்டு மருந்தை பயன்படுத்தினால் கண்ணாடி அணிய தேவையில்லை என்று பிரஸ்வியூ நிறுவனம் விளம்பரம் செய்திருந்த நிலையில் அந்த பொருளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை அதனை சந்தைப்படுத்தக்கூடாது எனவும் அறிவித்துள்ளது மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் 

40 வயதிற்கு மேலானவர்களுக்கு கண் பார்வையில் பிரச்சினை ஏற்படும். புத்தகம், பேப்பர் படிக்க சிரமம் ஏற்படும் போது கண்ணாடி அணியத் தொடங்குவார்கள். வெள்ளெழுத்து பிரச்சினை என்று சொல்வார்கள். அப்போது ரீடிங் கிளாஸ் அணிந்து படிப்பார்கள். வயதுக்கு ஏற்ப, நம் கண்கள் அவற்றின் நெகிழ்ச்சித்தன்மையை இழப்பதன் காரணமாக இது போன்ற கண்ணாடிகள் தேவைப்படுகின்றன. பொதுவாக 40 வயதிற்குப் பிறகு தொடங்கும் ஒரு கண் நோயான ப்ரெஸ்பியோபியாவை பெறும்போது இந்த நிலை நமக்கு ஏற்படுகிறது. 

படிக்கும் போது தூரத்தில் உள்ள பொருள்களின் மீது கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட கூடும், இதற்கு தான் இந்த ரீடிங் கிளாஸ்கள் தேவைப்படுகின்றன. உலகளவில் சுமார் 1.8 பில்லியன் மக்கள் பிரஸ்பியோபியாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதற்காக ஒரே தீர்வு கண்ணாடி போடுவதுதான். இந்த நிலையில் இந்த பிரஸ்பியோபியா பிரச்சினைக்கு தீர்வாக கண் சொட்டு மருந்து கண்டுபிடித்துள்ளதாக பிரஸ்வியூ மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கடந்த வாரம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட  என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் பிரஸ்போபியா சிகிச்சைக்காக PresVu கண் சொட்டு மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இது உலக அளவில் 1.09 பில்லியன் முதல் 1.80 பில்லியன் மக்களை பாதிப்பதாக தெரிகிறது.ப்ரெஸ்பியோபியா என்பது வயதானவுடன் இயற்கையாகவே ஏற்படுகிறது, இது நெருக்கமான பொருள்களில் கவனம் செலுத்துவதில் சிரமத்திற்கு வழிவகுக்கிறது. பொதுவாக 40களின் நடுப்பகுதியில் தொடங்கி 60களின் பிற்பகுதி வரை மோசமாக நிலையை எட்டி விடுகிறது.  

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின்  பொருள் நிபுணர் குழு  முன்னதாக தயாரிப்பைப் பரிந்துரைத்த பிறகு, என்டோட் ஃபார்மாசூட்டிகல்ஸ் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடமிருந்து இறுதி ஒப்புதலைப் பெற்றது.

PresVu என்பது 40 வயதிற்கு மேற்பட்டவர்களை பாதிக்கும் பொதுவான வயது தொடர்பான பிரச்சனை தான். பார்வை நிலையான Presbyopia உள்ளவர்களுக்கு படிப்பவர்களின்  கண்ணாடி அதாவது (ரீடிங் கிளாஸ்) தேவையை குறைக்க வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கண் சொட்டு மருந்து எனக்   கூறப்படுகிறது.
ENTOD பார்மாசூட்டிகல்ஸ் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் இருந்து இறுதி ஒப்புதலைப் பெற்றது.இந்த தனித்துவமான உருவாக்கம் மற்றும் அதன் உற்பத்தி செயல்முறைக்கான காப்புரிமைக்கு உற்பத்தியாளர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சொட்டுக்கு சிடிஎஸ்சிஓ, அதாவது மத்திய மருந்துகள் நிபுணர் குழு அனுமதி வழங்கி இருந்தது. அது போல் இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரின் அனுமதியும் பெறப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் மத்திய மருந்துகள் நிபுணர் குழு தாங்கள் அளித்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது இந்த சொட்டு மருந்து பயன்படுத்தினால் கண்ணாடியே தேவையில்லை என நிறுவனத்தின் தவறான விளம்பரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மறுஉத்தரவு வரும் வரை இந்த மருந்தை சந்தைப்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் Pilocarpine என்ற மருந்து பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது புதியதல்ல ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் மருந்துதான் என கண் மருத்துவர்களும் தெரிவித்து வருகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow