GATE Application 2024 : கேட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
GATE Exam Application 2024 : பொறியியல் படிப்புகளுக்காக கேட் நுழைவு தேர்வுக்கு இன்று(ஆகஸ்ட் 24) முதல் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் படிப்புகளுக்காக கேட் நுழைவு தேர்வுக்கு இன்று(ஆகஸ்ட் 24) முதல் விண்ணப்பிக்கலாம்.
GATE Exam Application 2024 : கேட் எனப்படும் பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு இந்தியாவில் உள்ள ஐஐடி உள்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வாகும். இத்தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும்.
கேட் என்று அழைக்கப்படும் கிரேஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் இன் இஞினியரிங் என்பது முதுகலை படிப்புகளில் சேருவதற்கும், BHEL, GAIL, HAL, IOCL, NTPC, NPCIL, ONGC, PGCI போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்காகவும் அடிப்படையான தகுதி தேர்வுகளில் ஒன்று.
இந்த கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உள்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகள் இந்த மதிப்பெண்கள் செல்லும். 2025ம் ஆண்டிற்கான கேட் தேர்வு பிப்ரவரி 1, 2 மற்றும் 15,16ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கேட் தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், இத்தேர்வுக்காக மையங்களை 8 மண்டலங்களாக பிரிக்கப்படவுள்ளன.
தேர்வு எழுதுவதற்கான் தகுதி:
பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, அறிவியல், வணிகம், கலை போன்ற பல்வேறு இளங்கலை பாடங்களில் 3ம் ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டில் படிக்கும் மாணவர்கள் இந்த கேட் தேர்வை எழுதுவதற்கான தகுதியை பெறுவார்கள்.
முன்பதிவு:
பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேட் தேர்வுக்கான முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 24) தொடங்கவிருந்த நிலையில் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கும் என ஒத்திவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை செப்டம்பர் 26ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய தவறினால், அபராதத்துடன் அக்டோபர் 7ம் தேதிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க: Kottukkaali BoxOffice Day 1: சூரியின் கொட்டுக்காளி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்!
சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
டிகிரி தொடர்பான ஆவணங்கள், நெட் பேங்கிங்/டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு/யுபிஐ, தேர்வரின் கலர் புகைப்படம், கையெழுத்தின் புகைப்படம், சாதிச் சான்றிதழ், PWD சான்றிதழ், ஆதார்/ பான் கார்டு/ வாக்காளர் அட்டை / லைசன்ஸ்-ன் காப்பி உள்ளிட்ட ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
What's Your Reaction?