காருடன் கடலில் விழுந்த ஓட்டுனர்.. 24 மணி நேரம் கழித்து உடல் மீட்பு
சென்னை துறைமுகம் கடற்கரையில் காருடன் தவறி விழுந்த கார் ஓட்டுனரின் உடல் 24 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது.
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முகமது சகி (33). இவர் துறைமுகத்தில் கடலோர காவல் படையில் பணிபுரிந்து வரும் அதிகாரி ஜொகேந்திர காண்டா என்பவருக்கு தற்காலிக கார் ஓட்டுனராக இருந்து வந்தார்.
காவல்துறை அதிகாரி ஜொகேந்திர காண்டாவை டவேரா காரில் துறைமுகத்திலிருந்து ஜவகர் டக் 5 என்ற இடத்திற்கு முகமது சகி அழைத்து சென்றுள்ளார்.
அப்போது காரில் திடீரென பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து காரானது தவறி கடலில் மூழ்கியுள்ளது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட கடற்படை அதிகாரி ஜோகேந்திர காண்டா காரின் கண்ணாடியை உடைத்து விட்டு வெளியே வந்து உயிர் தப்பியுள்ளார். ஆனால் கார் ஓட்டுனர் ஆன முகமது காருடன் கடலில் மூழ்கினார்.
இது குறித்து உடனடியாக கடலோர காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 30க்கும் மேற்பட்ட கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர், ஸ்கூபா வீரர்கள் மற்றும் துறைமுகம் போலீசார் என அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து கடலில் மூழ்கிய காரை தீவிரமாக தேடினர். 85 அடி ஆழ கடலில் மூழ்கிய காரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் காரை மீட்ட நிலையில் ஓட்டுனரை கடந்த 24மணி நேரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திலிருந்து 100மீ தொலைவில் கார் ஓட்டுனர் சகியின் உடலானது ஒதுங்கி உள்ளது. மீட்பு படையின் சகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து துறைமுகம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில், நேற்றிலிருந்து முகமது சகி உறவினரை காவல்துறையினர் அலைக்கழிப்பதாகவும் உடல் கைப்பற்றிய பின்பும் தங்களிடம் தெரிவிக்காமல், நேரடியாக வேறு பாதையில் மருத்துவமனைக்கு உடல் கொன்று சென்று இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த முகமது சகி பணியாற்றிய நிறுவனத்திடம் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் அவர் விபத்தில் சிக்கிய சமயம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் என்பது கூட காவல்துறையினர் உரிய பதில் தெரிவிக்கவில்லை எனவும், கால் டாக்ஸி நிறுவனத்திற்கு சாதகமாக காவல்துறையினர் செயல்படுவதால் எங்களுக்கு உரிய நீதி வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?