அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. முதல் தகவல் அறிக்கை வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dec 26, 2024 - 09:48
Dec 26, 2024 - 10:39
 0
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. முதல் தகவல் அறிக்கை வெளியீடு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவரும், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்கி படித்து வந்துள்ளனர். கடந்த 23-ஆம் தேதி இரவு இருவரும் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுற்றுத்தியோடு அந்த மாணவியிடம் பாலியன் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அந்த மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக பலரும் விமர்சித்து வந்தனர்.  மேலும், ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூபுரத்தை சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  

நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வரும் ஞானசேகரன், தினந்தோறும் இரவு நேரங்களில் பிரியாணிக் கடை விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு செல்வதும், அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஞானசேகரனை காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். திமுக பிரமுகர் ஞானசேகரனுக்கு   இடது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவலில் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள குற்றவாளிகள் சிகிச்சை பிரிவில் (Convict Ward) சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், தாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும் பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தரவைப்பேன் என ஞானசேகரன் மிரட்டியதாகவும், அலைபேசியில் இருந்த தனது தந்தை செல்போன் எண்ணை எடுத்துக் கொண்டு அவருக்கு வீடியோ அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.

மேலும், தாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் ஞானசேகரன் தங்களை விடவில்லை என்றும், தனக்கு அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலு கட்டாயமாக தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினார் என்று மாணவி அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow