2025 புத்தாண்டு : சட்டவிரோதமான பைக் ரேஸ்.. போலீசார் எடுத்த கடும் நடவடிக்கை..!

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக  சட்டவிரோத பைக் ரேசிங் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Dec 25, 2024 - 21:33
 0
2025 புத்தாண்டு :  சட்டவிரோதமான பைக் ரேஸ்.. போலீசார் எடுத்த கடும் நடவடிக்கை..!
2025 புத்தாண்டு : சட்டவிரோதமான பைக் ரேஸ்.. போலீசார் எடுத்த கடும் நடவடிக்கை..!

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக  சட்டவிரோத பைக் ரேசிங் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சென்னை முழுவதும் சட்டவிரோதமாக நடைபெறும் பைக் பந்தயத்தைக் கட்டுப்படுத்த ஒரு வலுவான மற்றும் இலக்கு உத்தியை கையாண்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் நிகழ்நேர சமூக ஊடக கண்காணிப்பு உள்ளிட்ட திறனுள்ள கண்காணிப்பு முறைகள் மூலம் சட்டவிரோதமாக நடைபெறும் பைக் பந்தய குழுக்களின் நகர்வுகளை அடையாளம் காணவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சமூக ஊடகங்கள் மற்றும் பெறப்படும் தகவல்களைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட தனிநபர்கள் மற்றும் பைக் பந்தய குழுக்களின் நடவடிக்கைகளை தீவிர கண்காணிப்பதில் கோடிட்டு காட்டப்படுகிறது. இதன் அடிப்படையில் முன்முயற்சி ஒரு பகுதியாக, பைக் ரேசிங் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 110 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் வாயிலாக பைக் பந்தயம் நடைபெறும் இடங்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள மண்டலங்களைக் கண்காணித்து வருகின்றன. மேலும் இக்குழுவினால் தணிக்கை செய்யப்பட்ட இடங்கள் உட்பட 165 வாகனச் சோதனைச் சாவடிகளை ஏற்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறன்றன. இது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் தப்பித்து செல்லாதவாறு இருப்பதை உறுதி செய்கிறது. 

சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு குழுக்கள் நகரின் கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்து செயல்படுகின்றன. பந்தயத்தில் ஈடுபடும் நபர்களால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முன் அவர்களை கண்டறிந்து விரைவான நடவடிக்கையை செயல்படுத்த வழிவகுக்கிறது.

நேற்று இரவு அண்ணாசாலை மற்றும் காமராஜர் சாலையில் 45 வாகனங்களில் சட்டவிரோதமாக பைக் பந்தயத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் போது 33 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் பைக்குகள் கைப்பற்றப்பட்டு அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் வருகின்ற புத்தாண்டு தினத்தை பொறுப்புடன் கொண்டாடுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் பாதுகாப்பான. விபத்து இல்லாத புத்தாண்டை உறுதிசெய்வதில் அனைத்து பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

சட்டவிரோதமாக பந்தயம் அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் பற்றிய எந்தவொரு அறிக்கையும் உடனடியாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரின் உதவி எண் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தொலைப்பேசி எண்ணை (919003130103) அறிவித்துள்ளனர். 

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பொதுமக்களுக்கு கடுமையான மற்றும் சமரசமற்ற எச்சரிக்கையை வெளியிடுகிறது. "எந்தவொரு நபரும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் அல்லது சட்டவிரோத பைக் பந்தயத்தில் ஈடுபட்டால் உடனடியாக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். 

குற்றவாளிகள் தங்கள் வாகனங்களை பறிகொடுப்பதோடு அல்லாமல், கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள். இத்தகைய பொறுப்பற்ற நடத்தை, உங்களின் வேலை வாய்ப்புகளை ஆபத்தில் ஆழ்த்துவது உட்பட உங்கள் எதிர்காலத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow