ராகு கேது தோஷம் போக்கும் விநாயகர்.. 12 ராசிக்காரர்களும் எந்த விநாயகரை வழிபட வேண்டும் தெரியுமா?

கணபதியை வணங்கிட கவலைகள் பறந்திடும். வினைகள் தீர்ப்பவர் விநாயகர். ராகு கேதுவினால் ஏற்படும் தோஷங்களை போக்கக்கூடியவர் கணபதி. பிள்ளையாரை பலவிதமாக கும்பிட்டிருப்போம். விநாயகருக்கு பல வடிவங்கள் உண்டு. பல பெயர்கள் உண்டு. ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் பொறுத்தும் ராகு கேது தோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் கடன் பிரச்சினை உள்ளவர்கள் வணங்க வேண்டிய கணபதியை பார்க்கலாம்.

Sep 6, 2024 - 16:49
Sep 7, 2024 - 10:08
 0
ராகு கேது தோஷம் போக்கும் விநாயகர்.. 12 ராசிக்காரர்களும் எந்த விநாயகரை வழிபட வேண்டும் தெரியுமா?
vinayagar chaturthi 2024 which ganapathi pray for 12 zodiac signs

சென்னை: 

முழுமுதற்கடவுளாக வணங்கப்படுபவர் பிள்ளையார். விநாயகரை சிவ ஆலயங்களில் வணங்குவது போல விஷ்ணு ஆலயங்களில் தும்பிக்கை ஆழ்வாராக வணங்குகின்றனர். சக்தியின் மைந்தன் கணபதியை சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பத்தோடு வணங்குகின்றனர். ஆனைமுகத்தோனை வணங்குபவர்கள் எத்தகைய துன்பங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை. விநாயகர் வினைகள் தீர்ப்பவர். சங்கடங்களை தீர்ப்பவர் சங்கரன் மைந்தன். கவலைகளை போக்குபவன் கணேசன், விநாயகருக்கு பல பெயர்கள் உண்டு. ஆதி விநாயகர் தொடங்கி வித்யா கணபதி, வீர கணபதி, செல்வ கணபதி பல கணபதிகள் உள்ளனர். மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்கள் எந்த கணபதியை வணங்கலாம் என்று பார்க்கலாம். 

நவகிரக தோஷங்கள் நீங்கும் கணபதி:

ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்று இந்துகள் சொல்லுகிறார்கள். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முருகனையும், உ என்பது பிள்ளையாரையும், ம் என்பது சிவசக்தியை குறிப்பதாகும். விநாயகரை முதல் கடவுளாக போற்றப்படுவதற்கு உதாரணமாக பல காரணங்கள் கூறப்படுகிறது. ஞானப்பழத்தை அடைய தாய், தந்தையை சுற்றி வந்து ஆன்மீக தத்துவத்தை முதன் முதலில் எடுத்துரைத்தவர் கணபதி. பொருள் மற்றும் ஆன்மீக தத்துவங்களின் இணைப்பாக விளங்கும் நம் உடலின் மூலாதார சக்கரத்தை கணபதி ஆளுவதாக அவர்கள் நம்புகிறார்கள். விநாயகரை வணங்கினால் நவகிரக தோஷங்களும் பறந்தோடும்.

மேஷம்:  

செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் சித்தி விநாயகரை ஒன்பது வாரங்கள் வணங்க காரியங்கள் சித்தியாகும். 

ரிஷபம்:

சுக்கிரனை ஆதிக்க நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே... சந்திரன் உச்சம் பெறுவது உங்க ராசியில்தான். கல்வி செல்வம் கிடைக்க ஸ்ரீ வித்யா கணபதியை வணங்கலாம். 

மிதுனம்:  

புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் கடன், நோய் பிரச்சினை தீர லட்சுமி கணபதியை வணங்குங்கள். சகல செல்வமும், லட்சுமி காடாட்சமும் கிடைக்கும். 

கடகம்:  

சந்திரனை ராசி நாதனாகக் கொண்டவர்கள் வணங்க வேண்டிய கணபதி ஹேராம்ப கணபதி. ராகு கேதுவினால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்குவதற்கு சிறு விநாயகரை டாலரில் கோர்த்து போட்டுக்கொள்ளலாம். 

சிம்மம்:

சூரியனை ராசி நாதனாகக் கொண்டவர்கள் வணங்க வேண்டிய கணபதி ஸ்ரீவிஜய கணபதி. ஒன்பது ஞாயிறுக்கிழமை சூரிய ஓரையில் விநாயகர் ஆலயம் சென்று சிதறுகாய் போட்டு வழிபட உங்களுக்கு வெற்றி அதிகம் கிடைக்கும். 

கன்னி :

புதனை ஆட்சி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் அரசமரத்தடி கணபதியை வணங்க நன்மைகள் கிடைக்கும். 

துலாம்:

சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வெற்றிகள் மேன்மேலும் கிடைக்க திங்கட்கிழமைகளில் கணபதியை வணங்க சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். நினைத்த காரியங்களில் வெற்றி பெற பஞ்சமுக விநாயகரை வீட்டில் வைத்து வணங்கலாம். 

விருச்சிகம்:

செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள்  சக்தி கணபதியை வணங்க எண்ணற்ற சக்திகள் செல்வங்கள் தேடிவரும். வெற்றிகள் கிடைக்க வெற்றி விநாயகரை வழிபடலாம். 

தனுசு:

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் சங்கடஹர சதுர்த்தி நாளில் வீர கணபதியை வணங்க வேண்டும். 

மகரம்:

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் உங்கள் ஆசையும் எண்ணமும் நிறைவேற யோக கணபதியை வணங்க வேண்டும். யோக கணபதியை வணங்க வெற்றிகள் தேடி வரும்.  ராகு கேதுவினால் ஏற்படும் தொந்தரவுகள் தீருவதற்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கலாம். 

கும்பம்:

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் சித்தி கணபதியை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட நன்மைகள் நடைபெறும். 

மீனம்:

குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்கள் பால கணபதியை அரசமரத்தடி விநாயகரை சதுர்த்தி நாளில் வணங்க சகல ஐஸ்வர்யங்களும் தேடி வரும் சங்கடங்கள் தீரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow