கடன் பிரச்சினை.. தீராத நோய் தீர.. எந்த மரத்தடி விநாயகரை எப்படி வணங்க வேண்டும்

விநாயகரை வணங்கினால் விக்னங்கள் தீரும். நோய் கடன் பிரச்சினை தீர முழு முழு முதற் கடவுளை வணங்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் எந்த விநாயகரை எப்படி வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Sep 6, 2024 - 14:49
Sep 7, 2024 - 10:08
 0
கடன் பிரச்சினை.. தீராத நோய் தீர.. எந்த மரத்தடி விநாயகரை எப்படி வணங்க வேண்டும்
vinayagar chathurthi 2024

முழு முதற்கடவுள் விநாயகரை ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம். வீட்டிலும் வழிபடலாம். ஆற்றங்கரையிலும், அரச மரத்தடியிலும் கண்டு வழிபாடு செய்யலாம். எப்படி வழிபாடு செய்தாலும் கைகூப்பித் தொழுபவரை கணபதி காப்பாற்றுவார். மஞ்சளில், பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்தால் அவர் பிள்ளையார். அவருக்கு அருகம்புல் சாற்றி மனதார கும்பிட்டால் நாம் கேட்ட வரங்களை கொடுப்பார். தோஷங்கள் நீங்கி சந்தோஷத்தை கொடுப்பார் விநாயகர்.

எந்த மரத்தடி விநாயகரை எப்படி வணங்குவது:

பிள்ளையாரை மண்ணிலே செய்து வழிபட்டாலும் சந்தனத்தில் செய்து வைத்து வணங்கினாலும், கும்பிட்டவர்களின் வாழ்க்கையில் குதூகலத்தை ஏற்படுத்துவார் கணபதி. அரசமரம், ஆலமரம், வன்னிமரம், வேப்பமரம், சந்தன மரம் என பல மரத்தின் அடியிலும் அற்புதமாக வீற்றிருப்பார் பிள்ளையார்.எந்த மரத்தடியில் பிள்ளையார் இருக்கின்றாரோ, அந்த மரத்திற்குரிய நட்சத்திரம், நாள் பார்த்து அன்றைய தினம் யோக பலம் பெற்ற நேரத்தில் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு வஸ்திரமும், மாலையும் அணிவித்து, அவல், பொரி, கடலை, அப்பம், மோதகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெறும்.

வன்னி மரத்தடி விநாயகர்:

வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். ஆலமரத்தடி விநாயகரை வழிபட்டால் ஞாலம் போற்றும் வாழ்வு அமையும். பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் கன்னிப் பெண்களுக்கு கவலை தீரும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வலஞ்சுழியாக வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.

அரச மர பிள்ளையார்: 

அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை எப்பொழுது வணங்கினாலும் உடனடியாக நல்ல பலன் கிடைக்கும். மூல நட்சத்திரமன்று மோதகம் படைத்து, குறிப்பிட்ட அளவில் வலம் வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும். சந்தோஷங்கள் வந்து சேரும். இந்த பிள்ளையார் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு. பூச நட்சத்திரத்தன்று இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்தால், விளைபொருள் மற்றும் பூமியால் லாபம் கூடும்.பணக் கஷ்டம் தீரும்.

நெல்லி மரத்தடி பிள்ளையார்: 

நெல்லி மரத்தடிப் பிள்ளையாரை பரணி நட்சத்திர நாளில் வழிபட்டால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும். தேங்காய் எண்ணெய் கொண்டு 108 விளக்குகள் ஏற்றி ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்தால் இரும்பு தொழில் அமோகமாக நடைபெறும். பெண் குழந்தைகளுக்காக ஏங்குபவர்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்கும். மன அமைதி ஏற்படும்.

புன்னைமரத்தடி விநாயகர்:

புன்னை மரத்தடி பிள்ளையாரை ஆயில்ய நட்சத்திர தினத்தில் இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக் கசப்பு நீங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியவர்கள் கூட மனம் மாறி மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். 

ஆலமர பிள்ளையார்: 

ஆலமரத்தின் கீழ், வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு, தீராத நோயினால் சிரமப்படுபவர்கள் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னங்களை நைவேத்தியம் செய்து தானமளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

நாவல் மரத்தடி பிள்ளையார்: 

நாவல் மரத்தடி விநாயகரை வழிபாடு செய்தால் குடும்ப ஒற்றுமை கூடும். இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் ஏழைச் சிறுவர்களுக்கு வெண்ணெய் தானம் அளித்து இவரை வழிபட்டு வர பிரிந்த தம்பதியினர், பிரிந்த குடும்ப உறவுகள் ஒன்று சேர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும். மகிழ மரத்தடி  பிள்ளையாருக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால், பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளிநாடு சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.

மாமரப் பிள்ளையார்: 

இந்தப் பிள்ளையாருக்கு கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு, ஏழை சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால் உறவுகள் நண்பர்களுக்குள் இருந்த போட்டி, பொறாமை, கோபம் பகைமை மாறி, பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும்.மகிழ மரத்தடி  பிள்ளையாருக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால், பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளிநாடு சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.

வில்வ மரத்தடி விநாயகர்: 

சித்திரை நட்சத்திரத்தன்று, வில்வமரத்தடி விநாயகரை வழிபட்டு ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் அளித்து, வில்வ மரத்தைச் சுற்றி வர பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். வில்வ மரத்தடியில்  அருள்புரியும் பிள்ளையார் தெற்கு நோக்கி இருப்பது சிறப்பு.வியாழன், புதன்கிழமைகளில் சந்தனத்தால் அலங்காரம் செய்து வழிபட்டால் பிள்ளைகளும் ஆர்வத்தோடு படிக்க ஆரம்பிப்பார்கள். 

இலுப்பைமரத்தடி பிள்ளையார்: 

ரேவதி நட்சத்திர நாளிலும் செவ்வாய் கிழமைகளிலும் இலுப்பை மரத்தடி பிள்ளையாருக்கு பசுநெய் கொண்டு தீபம் ஏற்றி மஞ்சள் நிற ஆடைகளை 10 வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கு தானம் தரலாம்.ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.  கட்டிடம் கட்டுபவர்கள், எந்தவித நஷ்டமும் இன்றி அதை கட்டி முடிக்க முடியும். தனித்த வாழும் முதியவர்கள், பெண்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை கூடும்.சந்தன மரத்தடியில் பிள்ளையார் அமர்ந்திருப்பது அபூர்வமானது. இந்த பிள்ளையாருக்கு சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட புதியதாக ஆரம்பிக்கும் வியாபாரம் அமோகமாக நடைபெறும். 

வேப்பமரத்தடி பிள்ளையார்: 

வேலை இல்லாமல் சிரமப்படுபவர்கள் வேப்ப மரத்தடிப் பிள்ளையாரை வழிபட்டால் நல்ல வேலை கிடைக்கும். நோய்கள் நீங்கும் கடன் பிரச்சினைகள் அகலும். வணிகர்களுக்கு வளர்ச்சி கூடும். வேப்பமரத்தடியில் அருள்புரியும் பிள்ளையார் கிழக்கு நோக்கி இருப்பது சிறப்பு. உத்திரட்டாதி நட்சத்திர நாளில், தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும். தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து, பிரசாதமாக கொடுத்தால் தீராத கடன் தொல்லைகளும் தீரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow