VISA Free To Visit Sri Lanka : இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை.. 35 நாடுகளைச் சார்ந்த பயணிகள் இனி போகலாம் ஜாலியா

VISA Free To Visit Sri Lanka : இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குச் சுற்றுலா வருவதற்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த முறையானது வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Aug 23, 2024 - 16:47
Aug 24, 2024 - 10:03
 0
VISA Free To Visit Sri Lanka : இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை.. 35 நாடுகளைச் சார்ந்த பயணிகள் இனி போகலாம் ஜாலியா
travellers from 35 countries visa is not required to visit sri lanka

VISA Free To Visit Sri Lanka : இலங்கைக்குச் சுற்றுலா வருவதற்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த முறையானது வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குச் சுற்றுலா வந்து ஆறு மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என்றும் இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹாரின் ஃபெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், ஆண்டுதோறும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாகவும் விளங்குகிறது. இங்கு  வனவிலங்குகள் சரணாலயங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், பிரசித்தி பெற்ற கோவில்களைக்  காண வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகிறார்கள். 2018 ஆம் ஆண்டில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 25 லட்சமாக உயர்ந்தது. இதற்காக சுற்றுலாப் பயணிகள் மொத்தம் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நற்செய்தியாக இந்தியா, இங்கிலாந்து உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குச் வருவதற்கு விசா தேவையில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், இந்தோனேசியா, ரஷியா, நியூசிலாந்து, ஓமன், கத்தார், தென் கொரியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, தாய்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையானது வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ஆறு மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என்றும் இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹாரின் ஃபெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow