Kottukkaali Review: “தமிழ் சினிமாவில் இது தரமான செய்கை..” சூரியின் கொட்டுக்காளி டிவிட்டர் விமர்சனம்

Actor Soori Kottukkaali Movie Twitter Review : பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

Aug 23, 2024 - 17:05
Aug 24, 2024 - 10:03
 0
Kottukkaali Review: “தமிழ் சினிமாவில் இது தரமான செய்கை..” சூரியின் கொட்டுக்காளி டிவிட்டர் விமர்சனம்
சூரியின் கொட்டுக்காளி டிவிட்டர் விமர்சனம்

Actor Soori Kottukkaali Movie Twitter Review : காமெடி நடிகராக வலம் வந்த சூரி, வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு சூரி நடிப்பில் ரிலீஸான கருடன் படமும் வெற்றிப் பெற்றது. இந்த வரிசையில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி இன்று வெளியாகியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த கொட்டுக்காளி, தற்போது ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கொட்டுக்காளி படத்தின் கதை ஒரே நாளில் நடக்கும் விதமாக உருவாகியுள்ளது. 

மதுரை அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் அன்னா பென்னுக்கு பேய் பிடித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். இதனால் அன்னா பென்னின் குடும்பத்தினரும், அவரை திருமணம் செய்யவுள்ள சூரியும், பேய் ஓட்ட சாமியாரிடம் கூட்டிச் செல்கின்றனர். இதற்காக அவர்கள் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் போது நடக்கும் சம்பவங்கள் தான், கொட்டுக்காளி படத்தின் கதை. இதனை பின்னணி இசையே இல்லாமல் தரமாக இயக்கியுள்ளாராம் பிஎஸ் வினோத்ராஜ்.

முக்கியமாக சூரி, அன்னா பென் இருவரையும் தவிர, கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ள அனைவரும் இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ்ஜின் உறவினர்கள் தானாம். அவர்களையும் கதைக்கு தேவையான விதத்தில் எதார்த்தமாக நடிக்க வைத்து கொட்டுக்காளி படத்தை இயக்கியுள்ளார் பிஎஸ் வினோத்ராஜ். கரகரப்பான குரலில் பேசும் சூரி நடிப்பில் மிரட்டியுள்ளதாகவும், அன்னா பென்னுக்கு படத்தில் ஒரேயொரு வசனம் தான். ஆனாலும் அவர் சிறப்பாக நடித்துள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள நெட்டிசன் ஒருவர், “அடுத்த 10 வருஷம் கழிச்சு சூரியை சினிமாவில் பார்க்குறவங்க, இவரு காமெடி ஆக்டரா அப்படினு ஆச்சரியமா கேட்பாங்க. தரமான செய்கையை சத்தமே போடாம செஞ்சிட்டு போயிட்டாரு. யோசிக்காம டிக்கெட் புக் பண்ணலாம் மக்களே” என ட்வீட் செய்துள்ளார். அதேபோல், கொட்டுக்காளி நெருக்கத்திற்கு உண்மையாக ஒரு வாழ்வியலை படமாக எடுத்துள்ளனர். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் புது அனுபவமாக இருக்கும் எனவும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். 

அதேபோல், கொட்டுக்காளி படம் முழுக்க அதே ஷேர் ஆட்டோவில் நாம் பயணிப்பதை போல உணர முடிகிறது. படத்திற்கு பின்னணி இசை இல்லையென்றாலும், அதனை லைவ் ரெக்கார்டிங், சவுண்ட் எஃபெக்ட்ஸ் மூலம் சரிசெய்துள்ளதாகவும், கதையின் ஆரம்பம் முதலே நாமும் அதில் பயணிக்கலாம் என்றும் நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். அதேபோல் கொடுக்காளி குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்றும், கிளைமேக்ஸில் வரும் டிவிஸ்ட் எதிர்பார்க்கவே இல்லை எனவும் ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். 

மேலும் படிக்க - தவெக கட்சிப் பாடலுக்கு வரவேற்பு இல்லையா..?

கொடுக்காளி படத்தின் கிளைமேக்ஸ் புதிய முயற்சி, ரசிகர்களையை முடிவு எப்படி இருக்கும் என யோசிக்க வைத்தது சூப்பர் எனவும் பாராட்டுகள் குவிந்துள்ளன. ஒட்டுமொத்தமாக கொட்டுக்காளி படத்துக்கு ரசிகர்களிடமும் பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. ஏற்கனவே கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கொட்டுக்காளி படத்தை பாராட்டியிருந்தனர். இப்போது இயக்குநர் பாலாவும் கொட்டுக்காளி படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். விடுதலை, கருடனை தொடர்ந்து கொட்டுக்காளியும் சூரியின் கேரியரில் தரமான படமாக அமைந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow