ராமேஸ்வரம் டூ காசி.! மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மிக பயணம் - தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

Rameswaram To Kasi Free Spiritual Tour : தமிழக அரசு, ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், ராமேஸ்வரம் முதல் காசி வரை இலவச யாத்திரை திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு 420 பேர் இத்திட்டத்தில் பயனடைய உள்ளனர்.

Sep 23, 2024 - 16:29
Sep 23, 2024 - 16:42
 0
ராமேஸ்வரம் டூ காசி.! மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மிக பயணம் - தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
rameswaram to kasi spiritual tou

Rameswaram To Kasi Free Spiritual Tour : 2024- 2025ஆம் ஆண்டில் 420 மூத்த குடிமக்கள் ராமேஸ்வரம் காசிக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர். இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் மண்டலத்திற்கு 21 நபர்கள் வீதம் 420 நபர்கள் தேர்வு செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆன்மிக பயணத்தில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது போல ஆன்மிகத்திற்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திமுக அரசு ஆட்சி அமைந்ததில் இருந்து அறநிலையத்துறையை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. 805 திருக்கோவிலுக்கு சொந்தமான 6703 கோடி ரூபாய் மதிப்புள்ள  சுமார் 6,853 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டுள்ளது,

கோயில்களுக்கு குடமுழக்கு நடத்துவது. 321 கோடி மதிப்பீட்டில் 85 புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. 86.97 கோடி மதிப்பீட்டில் 121 அன்னதான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. ரோப் கார் வசதி மேற்கொள்வது என இடைவிடாமல் திட்டங்கள் நடமுடைப்படுத்தப்படுகிறது. அந்தவகையில் ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பழனி கோயிலில் முருகன் மாநாடும் வெற்றிகரமாக நடத்தப்பட்டும் உள்ளது.

இதனையடுத்து அறநிலையத்துறை சார்பாக இலவசமாக ஆன்மிக சுற்றுலாவும்(Free Spiritual Tour) அழைத்து செல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களுக்கு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுலாத்துறையும் அறநிலையத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ஆடி மாதத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மிக சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு நாள் ஆடி அம்மன் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கு அந்த அந்த மண்டலத்தை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இது மட்டுமில்லாமல் இலவச ஆன்மிக பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி ஆடி மாதத்தையொட்டி தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட்டனர். இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக புரட்டாசி மாதத்தையொட்டி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெருமாள் கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதற்காக அறநிலையத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை என 10க்கும் மேற்பட்ட மண்டலங்களில் இருந்து ஆன்மிக பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இந்த பயணத்தி்ல் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாட்டோடு மதியம் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இதே போன்று திட்டங்களால் ஆன்மிக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஆன்மிக பக்தர்கள் அதிகம் விரும்புவது ராமேஸ்வரம் - காசி(Rameswaram To Kashi Tour) பயணத்தை தான். தான் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என விரும்புவார்கள். வருவாய் அதிகமாக உள்ளவர்கள் எளிதாக செல்ல முடியும். ஆனால் குறைந்த வருவாய் உள்ளவர்களால் ஒரே நேரத்தில் இரண்டு ஊர்களுக்கும் செல்ல முடியாது.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பாக ராமேஸ்வரம் முதல் காசிக்கு இலவச ஆன்மிக பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. அதன் படி ஒரு நபருக்கு 25ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த பயணம் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில், 2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பில் ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்திட 50 லட்சம் ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியது.

இந்த பயணத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து நடப்பு ஆண்டு 300 பேர் அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக தமிழக அரசு 75 லட்சம் ரூபாய் ஒதுக்கிய நிலையில் ஆன்மிக பக்தர்கள் பெரும் ஆர்வமாக பதிவு செய்தனர். இதனையடுத்து 2024- 2025ஆம் ஆண்டில் 420 மூத்த குடிமக்கள் ராமேஸ்வரம் காசிக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர். இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் மண்டலத்திற்கு 21 நபர்கள் வீதம் 420 நபர்கள் தேர்வு செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆன்மிக பயணத்தில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow