மீனர்களுக்கு மொட்டை அடிக்கிறார்கள்.. மீன்பிடிக்க ஆசையே வரக்கூடாதா?.. திலகபாமா குற்றச்சாட்டு

மீனவர்களுக்கு தண்டனை கொடுத்து மொட்டை அடிக்கிறார்கள் என்றும் மீன்பிடிக்க ஆசையே வரக்கூடாது என்பதுபோல் இலங்கை அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாக பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.

Oct 17, 2024 - 02:25
 0
மீனர்களுக்கு மொட்டை அடிக்கிறார்கள்.. மீன்பிடிக்க ஆசையே வரக்கூடாதா?.. திலகபாமா குற்றச்சாட்டு
இலங்கை கடற்படை மீனவர்களுக்கு மொட்டை அடிக்கிறார்கள் - திலகபாமா

பாமக மாநில பொருளாளர் திலகபாமா இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தருவைகுளத்தில் இருந்து 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடி வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த 162 மீனவர்கள் மற்றும் அவர்களின் உடமைகளான 192 படகுகளும் இலங்கையில் உள்ளது.

தமிழக மீனவர்களுக்காக மத்திய அரசும், மாநில அரசும் என்ன செய்துள்ளது என்கிற கேள்வி உள்ள நிலையில், பாமக தலைவர் என்னை நேரடியாக சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை குறித்து அறிந்து வர சொன்னார், அதை தொடர்ந்து வெளியேறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இது குறித்து விவாதிப்போம் என்று கூறியதன் அடிப்படையில் இலங்கை சென்று இருந்தேன்.

சமீபத்தில் 50 மீனவர்களை விடுவித்ததாக சொல்கிறார்கள் ஆனால் அவர்களின் படகுகள் என்ன ஆனது. மீனவனின் படகை பிடித்துக் கொண்டு அவனை விட்டால் அவன் பிணத்திற்கு சமம். இந்த கேள்வியை இங்கு யாரும் எழுப்பவில்லை. தமிழகத்தில் வேறு ஒரு அரசியல் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்கள் இந்த அரசியலுக்குள் சிக்கி சிரமப்படுகிறார்கள்.

தமிழகத்தில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் நாளையே மீனவர்களை சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசினால் வற்புறுத்த முடியும். மீனவர்களை விடுவிப்பதை மட்டும் கணக்கில் காட்டாமல் அவர்களின் ஒன்றரை கோடி மதிப்புள்ள படகுகளையும் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மீட்டுத் தர வேண்டும்.

முன்பு 15 நாள் விசாரணை வைத்துவிட்டு வேறு எதுவும் கடத்தவில்லை என்றால் விடுவித்து விடுவார்கள். ஏன் எல்லையை தாண்டுகிறாய் என்று மீனவர்களுடன் கேள்வி கேட்காதீர்கள். இங்குள்ள எல்லையை நம்மாலேயே பார்க்க முடியவில்லை. சாமானியனான அவனுக்கு எல்லை தெரியாது. ஆனால் தற்போது உடனடியாக தண்டனை கொடுத்து மொட்டை அடிக்கிறார்கள். மீனவனுக்கு மீன்பிடிக்க ஆசையே வரக்கூடாது என்பது போல் இலங்கை அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

கடிதம் அனுப்புவதற்கு நான் ஸ்டாலின் இல்லை. வெளியூர் உத்தர அமைச்சர் நேரில் சந்தித்து பேசாமல் இதற்கு தீர்வு காண முடியாது. அங்குள்ள அதிகாரிகள் மீனவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்வதாக சொல்கிறார்கள் சிறையில் வைத்துக் கொண்டு விருந்தோம்பல் செய்வது என்ன பயன்? மீனவர்கள் ஒருவேளை எல்லையை கடக்கும் போது அந்தந்த நாட்டிற்குள் தண்டனை கொடுத்தால் கூட பரவாயில்லை, வெளிநாட்டு சிறையில் இருப்பதை மிகக் கொடுமையான விஷயம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow