மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வு..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் எழுந்து வரும் சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Dec 28, 2024 - 17:17
 0
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வு..!
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வு..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன் என்ற நபரை கைது செய்துள்ளனர். இந்த பாலியல் பலாத்கார விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த பிரச்னையாக மாறி உள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,  அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக ஆளுநரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான ஆர்.என்.ரவி இன்று மதியம் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மதியம் 12.30 மணிக்கு ஆளுநர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வருதை தந்தார்.

தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் கோபால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆபிரகாம், பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் ஆகியோர் ஆளுநரின் இந்த ஆய்வின்போது உடனிருந்ததாக கூறப்படுகிறது. 

ஆளுநர் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு  வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களைச் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.  பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். 

அதனைத் தொடர்ந்து ஆளுநர், அங்கு பயிலும் மாணவ- மாணவிகள் 25 பேரிடம் கலந்துரையாடி அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சிசிடிவி கேமராக்கள், அவைகளின் செயல்பாடுகள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்ததாக தெரிகிறது. ஆளுநரின் இந்த ஆய்வைத் தொடர்ந்து சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow