குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு SIGTA விருது..!

தமிழில் திரையுலகை சேர்ந்த நடிகை குஷ்பு, காமெடி நடிகர் யோகி பாபு, நடிகர் விமல் ஆகியோருக்கு கத்தாரில் SIGTA விருது வழங்கப்பட்டது.

Dec 27, 2024 - 21:34
Dec 28, 2024 - 15:18
 0
குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு SIGTA விருது..!
குஷ்பு, யோகிபாபுவிற்கு SIGTA விருது..!

உலகளாவிய அளவில் சாதனைகள் புரிந்திட்ட தென்னிந்திய திரைத்துறையில்,  திறமையாளர்களை கௌரவிக்கும் SIGTA விருது கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான முறையில் கத்தார் வாழ் தமிழர் சாதிக்பாஷா நடத்தி வருகிறார்.

2024 இந்த வருடம் கத்தாரின் தலைநகரான தோகாவில் உள்ள QNCC அரங்கத்தில் சிறப்பாக  நடைபெற்றது இதில் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கப்பட்டது.

தமிழில் திரையுலகில் நடிகை குஷ்பு, காமெடி நடிகர் யோகி பாபு, நடிகர் விமல், காயத்ரி, ஜீவாரவி, ரியாஸ் கான், விச்சு, T.S.K , கன்னட திரையுலகில் நடிகையாக மிகப்பெரிய சாதனையை படைத்து அரசியலில் இருந்து வரும் சுமலதா மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பாளர் நடிகர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை அம்மு மற்றும் அஸார் இருவரும் தொகுத்து வழங்கினார்கள்.

கத்தாரில் இந்தியத் தூதரக அதிகாரிகள்  மற்றும் கத்தார் அரசு அதிகாரிகள் பங்கேற்க, அனைத்து தமிழ்ச் சங்கங்களின் ஒத்துழைப்புடன், தமிழ், மலையாளம், கன்னட மக்கள் முன்னிலையில் நடைபெற்ற  இந்த பிரம்மாண்ட  நிகழ்வில் சிறந்த தொழிலதிபர்கள் சிறந்த சமூக சேவகர்கள் என பல துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow