GOAT 3rd Single Release Date : விஜய்யின் கோட் மூன்றாவது சிங்கிள் அப்டேட்... போஸ்டர்ல அத கவனிச்சிங்களா..?

Actor Vijay GOAT 3rd Single Release Date Update : விஜய் நடித்து வரும் தி கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் வரும் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 1, 2024 - 23:52
Aug 2, 2024 - 15:58
 0
GOAT 3rd Single Release Date : விஜய்யின் கோட் மூன்றாவது சிங்கிள் அப்டேட்... போஸ்டர்ல அத கவனிச்சிங்களா..?
Actor Vijay GOAT 3rd Single Release Date Update

Actor Vijay GOAT 3rd Single Release Date Update : விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் தி கோட், செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் கோட் விஜய் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் ரிலீஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த இரு தினங்களாகவே கோட் மூன்றாவது சிங்கிள் பற்றி அப்டேட்கள் வெளியாகி வந்தன.  

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் கோட் மூன்றாவது சிங்கிள் பற்றி அப்டேட் கொடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது வெளியான அப்டேட்டில், வரும் 3ம் தேதி கோட் மூன்றாவது பாடல் ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக செம கலஃர்புல்லான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு மட்டும் தனது விட்டர் தளத்தின் ஒரே பதிவில், இந்த போஸ்டரை மூன்றாக ஷேர் செய்துள்ளார். அதாவது 3ம் தேதியில் மூன்றாவது சிங்கிள் என்பதை குறிக்கும் விதமாக அவரது டிவிட்டர் பதிவு அமைந்துள்ளது.

அதேபோல், இந்த போஸ்டரில் விஜய்யுடன் நடிகை ஒருவர் நடனம் ஆடுவது போல் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அது நாயகி மீனாட்சி செளத்ரியா அல்லது கேமியோ ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்படும் த்ரிஷாவா என ரசிகர்களிடம் எதிர்பார்க்க வைத்துள்ளது. கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான விசில் போடு பாடலில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா இணைந்து மாஸ் காட்டியிருந்தனர். அடுத்து வெளியான செகண்ட் சிங்கிள் ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடலில், விஜய்யும் சினேகாம் வைப் கொடுத்திருந்தனர். இது ஃபேமிலி பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மூன்றாவது சிங்கிள் விஜய்யின் டூயட் சாங்-ஆக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க - டாப்ஸியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

அதேபோல், நாளை (ஆக.2) காலை 11 மணிக்கு அடுத்த அப்டேட் என குறிப்பிட்டுள்ளார் கோட் இயக்குநர் வெங்கட் பிரபு. இது, கோட் மூன்றாவது சிங்கிளின் ப்ரோமோவாக இருக்கும் எனத் தெரிகிறது. கோட் மூன்றாவது சிங்கிள் அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் தி கோட் மூன்றாவது சிங்கிள் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் படங்களில் எப்போதுமே ஒரு மேஜிக்கல் சாங் இருக்கும். கோட் படத்தில் நாளை வெளியாகும் மூன்றாவது பாடல் அந்த குறையை போக்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.  

கோட் படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, அஜ்மல், யோகி பாபு, ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், லைலா உள்ளிட்ட மேலும் பலர் நடித்து வருகின்றனர். தி கோட் திரைப்படம் ஆக்ஷன் ப்ளஸ் ஃபேமிலி சென்டிமென்ட் ஜானரில், சயின்ஸ் பிக்ஷன் மூவியாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கோட் மூன்றாவது சிங்கிளைத் தொடர்ந்து விரைவில் இசை வெளியீட்டு விழாவுக்கான தேதியை அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow