Taapsee Pannu Net Worth: ஆடுகளம் டூ பான் இந்தியா ஸ்டார்... டாப்ஸியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

Actress Taapsee Pannu Full Net Worth 2024 : பான் இந்தியா நடிகையாக வலம் வரும் டாப்ஸி இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா, வெப் சீரிஸ் என வெரைட்டியான ஜானர்களில் நடித்து வரும் டாப்ஸியின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.

Aug 1, 2024 - 21:51
Aug 2, 2024 - 15:49
 0
Taapsee Pannu Net Worth: ஆடுகளம் டூ பான் இந்தியா ஸ்டார்... டாப்ஸியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
Actress Taapsee Pannu Full Net Worth 2024

Actress Taapsee Pannu Full Net Worth 2024 : தெலுங்கில் ஜும்மண்டி நாதம் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான டாப்ஸ், தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த இப்படத்தில் டாப்ஸியின் கேரக்டர் ரசிகர்களிடம் நன்றாக ரீச் ஆனது. டாப்ஸிக்கு செட்டாகும் வகையில், ‘வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாய்ங்களா’ என ஒரு பாடலை ஆடுகளம் படத்தில் வைத்திருந்தார் வெற்றிமாறன். ஆடுகளத்தைத் தொடர்ந்து தமிழில் வந்தான் வென்றான், வை ராஜா வை என ஒருசில படங்களில் மட்டுமே நடித்தார். 

ஆனால், தெலுங்கு, இந்தி மொழிகளில் டாப்ஸிக்கு சரியான மார்க்கெட் அமைந்தது. இதனால், டோலிவுட், பாலிவுட் பக்கம் சென்ற டாப்ஸி, இப்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக ஷாருக்கானுடன் டுங்கி படத்தில் நடித்திருந்தார் டாப்ஸி. இதுதவிர மேலும் ஃபிர் ஆயி ஹசீன் தில்ருபா (Phir Aayi Hasseen Dillruba), கேல் கேல் மெய்ன் (Khel Khel Mein) ஆகிய படங்களும் டாப்ஸியின் நடிப்பில் வெளியாகவுள்ளன. அதேபோல், வெப் சீரிஸ்களிலும் தற்போது கவனம் செலுத்தி வரும் டாப்ஸி, ஏராளமான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க - அந்தகன் ரிலீஸ் தேதி மாற்றம்..!

பஞ்சாப் லூதியானவில் பிறந்த டாப்ஸி (Taapsee Pannu), சுத்தமான சைவ பிரியராம். ஆனால், பார்டிகளில் மட்டும் தவறாமல் ஆஜராகிவிடுவார். தமிழில் பிஸியாக நடித்து வந்தபோது, நடிகர் மஹத் உடன் டாப்ஸிக்கு காதல் என செய்திகள் வெளியாகின. ஆனால், அவரோ டென்மார்க் பேட்மிட்டன் வீரர் மதியாஸ் போய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தாண்டு மார்ச் மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எப்போதும் கர்லிங் ஹேர் ஸ்டைலில் க்ளாம் டால் போல வலம் வருகிறார் டாப்ஸி.

இந்நிலையில், டாப்ஸி ஒரு படத்தில் நடிக்க 1 முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பளம்(Taapsee Pannu Salary) வாங்குகிறாராம். அதேபோல், விளம்பரங்களில் நடிப்பதன் மூலமும் கோடிகளில் வருமானம் ஈட்டுகிறார் டாப்ஸி. அதன்படி, வோக் ஐவியர், கார்னியர் கலர் நேச்சுரல், பேக்கிட்ஸ், நிவியா, லைரா, மெலஞ்ச் பை லைஃப் ஸ்டைல், ரீபோக், சுவிஸ் பியூட்டி ஆகிய பிராண்ட்களுக்கு டாப்ஸி தான் விளம்பர மாடலாக உள்ளார். சினிமா, விளம்பரங்கள் என இரண்டிலும் நடிப்பதன் மூலம் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார். 

அதேபோல், மும்பை அந்தேரி பகுதியில் ஒரே கட்டடத்தில் இரண்டு பிளாட்களை சொந்தமாக வாங்கியுள்ளாராம் டாப்ஸி. அதில் ஒன்று 3 படுக்கை அறைகள் வசதி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிளாட்களின் மொத்த மதிப்பு 10 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. மேலும் டெல்லி, நொய்டா நகரங்களில் டாப்ஸிக்கு சொந்தமாக பிளாட்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புடைய Mercedes GLE 250D கார் வாங்கினார் டாப்ஸி. இதுதவிர அவருக்கு Renault Captur, BMW 3-Series GT, BMW X1, Audi A8L, Jeep Compass ஆகிய கார்களையும் சொந்தமாக உள்ளன. இதனடிப்படையில் டாப்ஸியின் மொத்து மதிப்பு(Taapsee Pannu Net Worth) 50 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow