Andhagan: தங்கலானுடன் மோத முடியாது..? பிரசாந்தின் அந்தகன் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!

Actor Prashanth Movie Andhagan Release Date : பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Jul 31, 2024 - 15:20
Jul 31, 2024 - 16:44
 0
Andhagan: தங்கலானுடன் மோத முடியாது..? பிரசாந்தின் அந்தகன் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!
Andhagan New Release Date

Actor Prashanth Movie Andhagan Release Date : 1990களில் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். பல ஹிட் படங்களில் நடித்துள்ள பிரசாந்த், கடந்த சில ஆண்டுகளாக ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். தற்போது விஜய்யுடன் தி கோட் படத்தில் நடித்து வரும் பிரசாந்த், மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது தந்தை இயக்கிய அந்தகன்(Andhagan) படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் பிரசாந்த். இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது அந்தகன். இப்படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி, சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.   

அந்தகன் படத்தின்(Andhagan Movie) ஷூட்டிங் முடிந்து சில வருடங்களாகவே ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் ஆகாமல் கிடப்பில் இருந்தது. செப்டம்பர் 5ம் தேதி விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகவுள்ளது. அதனால் அதற்கு முன்னதாக அந்தகனை ரிலீஸ் செய்துவிட படக்குழு முடிவு செய்து, ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகும்(Andhagan Release Date August 9) என அறிவித்தது. இதற்கு முன்பும் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் வெளியாகாமல் பூச்சாண்டி காட்டி வந்தது அந்தகன். ஆனால், இந்தமுறை கண்டிப்பாக அந்தகன் ரிலீஸாகிவிடும் என சொல்லப்பட்டது.  

அதற்கெல்லாம் காரணம், சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படமும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளது தான். அதாவது விக்ரமிற்கு எதிராக தான் அந்தகன் ரிலீஸ் தேதியை(Andhagan Release Date) தியாகராஜன் அறிவித்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டது. பிரசாந்த் – விக்ரம் இருவருமே உறவினர்களாக இருந்தாலும், குடும்ப பிரச்சினை காரணமாக பேசிக்கொள்வது கிடையாது. அதேநேரம் திரையில் இருவருக்கும் இடையே நீயா நானா என்ற போட்டி நிலவி வந்தது. சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனால் தங்கலான் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேபோல், தங்கலான் ப்ரோமோஷனுக்காகவே பல கோடிகளை செலவு செய்து வருகிறது தயாரிப்பு நிறுவனம்.

மேலும் படிக்க - ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் ரிலீஸுக்கு பாதுகாப்பு

இன்னொரு பக்கம் அதே ஆகஸ்ட் 15ம் தேதி, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமாண்டி காலனி 2ம் பாகம், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா ஆகிய படங்களும் வெளியாகின்றன. இதனால் ஆகஸ்ட் 15ல் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்தே அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதியை(Andhagan Release Date) படக்குழு மாற்றியுள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்தப் படம் ஒரு வாரம் முன்னதாக ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுவரை வெளியான அந்தகன் படத்தின் ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் படமும் பிரசாந்துக்கு கம்பேக் கொடுக்கும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

அந்தகனை தொடர்ந்து விஜய்யின் கோட் திரைப்படமும் பிரசாந்த்(Actor Prashanth) நடிப்பில் வெளியாகவுள்ளது. கோட் படத்தில் பிரசாந்த் நடிப்பது உறுதியானதுமே அவருக்கு சில இயக்குநர்களிடம் இருந்து அழைப்பு சென்றுள்ளது. அதன்படி அந்தகன், தி கோட் தவிர மேலும் 3 படங்களில் பிரசாந்த் கமிட்டாகியுள்ளார்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow