கண்டெய்னரில் பணத்துடன் சிக்கிய கார்.. ஏ.டி.எம். கொள்ளையர்களால் பரபரப்பு

நாமக்கல் அருகே கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் என்கவுன்டரில் போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

Sep 27, 2024 - 12:38
Sep 27, 2024 - 13:51
 0
கண்டெய்னரில் பணத்துடன் சிக்கிய கார்.. ஏ.டி.எம். கொள்ளையர்களால் பரபரப்பு
கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் - ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

நாமக்கல் மாவட்டம் பச்சாம்பாளையம் பகுதியில் 2 கார்கள், 4 பைக்குகள் மீது மோதிவிட்டு கண்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் சென்றுள்ளது. போலீஸார் தடுத்து நிறுத்தியும் நிறுத்தாமல் சென்றதாலும், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதும் வகையில் சென்றதாலும், காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் வாகன ஓட்டி லாரியை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு தப்பி ஓட்டம் என தெரிகிறது. சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீஸார் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு சில வட மாநில இளைஞர்கள் துப்பாக்கியுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான அதிரடி படையினருடன், கண்டெய்னர் வாகனத்தை சுற்றிய வளைத்தனர். மேலும், அப்பகுதியை போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதியை அறிவித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கண்டெய்னர் லாரியை சோதனை செய்வதற்காக வனப்பகுதிக்குள் கொண்டு சென்றனர்.

வாகனத்தை திறந்து பார்த்த போது அந்த இன்னோவா சொகுசு கார் ஒன்றும் பணம் கட்டு கட்டாக இருந்ததுடன் 6 வடமாநிலத்தவர்கள் இருந்துள்ளனர். அவர்கள், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் இரண்டு ஏடிஎம் மிசினை கேஸ் வெல்டிங் மெசின் கொண்டு உடைத்து திருடிய நபர்களாக இருக்கக்கூடும் என போலீஸார் சந்தேகம் அடைந்தனர்.

இந்நிலையில், கண்டெய்னரை திறக்க முற்பட்டபோது, காவல் ஆய்வாளரை கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டியதால், போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு கொள்ளையனின் காலில் சுட்டு, போலீஸார் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கண்டெய்னர் வாகனத்தில் 7 பேர் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், கண்டெய்னர் லாரிக்குள் பதுங்கியிருந்த 5 கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் அந்த பணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.66 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவிர, லாரிக்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சொகுசு கார், ஏடிஎம் கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow