தூத்துக்குடி வஉசி சர்வதேச கன்டெய்னர் டெர்மினல் வளர்ச்சியின் அடையாளம்.. பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழக துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவின் கடலோர உள்கட்டமைப்பில், தூத்துக்குடி சர்வதேச கன்டெய்னர் டெர்மினல் புதிய நட்சத்திரமாக திகழ்கிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தால் செலவு குறைவதுடன், இந்தியாவின் அந்நிய செலாவவணியை சேமிக்க முடியும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Sep 16, 2024 - 17:19
 0
தூத்துக்குடி வஉசி சர்வதேச கன்டெய்னர் டெர்மினல் வளர்ச்சியின் அடையாளம்.. பிரதமர் மோடி பெருமிதம்
pm narendra modi inauguration thoothukudi port

தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் 40 சதவிகிதம் பெண் பணியாளர்கள் உள்ளனர். இந்த முனையம் கடல்சார் துறையில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் அடையாளமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். வ உ சிதம்பரனார்  துறைமுகமானது இன்று உலகம் எதிர்கொண்டிருக்கும் காலநிலை மாற்றச் சவால்களை எதிர்கொள்வதில் பசுமையான ஹைட்ரஜன் மையமாக அறியப்படுகிறது மிகவும் வெற்றிகரமாக இருக்கும்.

பிரதமர் மோடி ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜார்க்கண்ட் சென்ற அவர் 6 புதிய வந்தே பாரத் ரயில்கள் சேவையை தொடங்கி வைத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.அதனைத்தொடர்ந்து குஜராத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, காந்திநகர் மற்றும் அகமதாபாத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிசக்தி, சாலைகள், வீட்டு வசதி துறை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

குஜராத் மாநிலம்  அகமதாபாத், புஜ் நகர் இடையே 2-ஆம் கட்ட மெட்ரோ வழித்தடத் திட்டம் நிறைவடைந்தது. இந்த மார்க்கத்தில் மெட்ரோ ரயில் சேவையயை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் கடலோர உள்கட்டமைப்பில் தூத்துக்குடி சர்வதேச கன்டெய்னர் டெர்மினல் புதிய நட்சத்திரமாக திகழ்கிறது. இந்த புதிய டெர்மினல் மூலம், வ.உ.சிதம்பரம் துறைமுகம் விரிவாக்கம் ஏற்படும். இந்த துறைமுகத்தால் செலவு குறைவதுடன், இந்தியாவின் அந்நிய செலாவவணியை சேமிக்க முடியும் என்று கூறினார். 

கடந்த 2 ஆண்டுக்கு முன், இந்த தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் திறனை மேம்படுத்த பல பணிகள் துவங்கப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரித மாதம் தூத்துக்குடி வந்த போது துறைமுகம் தொடர்பான மேலும் பல பணிகள் துவங்கின. இந்த பணிகள் விரைவாக முடிவடைவதை கண்டு மகிழ்ச்சி இருமடங்காகிறது. இந்த துறைமுகத்தில் 40 சதவிகிதம் பெண் பணியாளர்கள் உள்ளனர். இந்த முனையம் கடல்சார் துறையில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் அடையாளமாக மாறும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழக துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow