நமோ பாரத் ரேபிட் ரயில்.. குஜராத்தில் கடைசி நிமிடத்தில் மாறிய வந்தே பாரத் மெட்ரோ ரயில்

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Sep 16, 2024 - 14:50
 0
நமோ பாரத் ரேபிட் ரயில்.. குஜராத்தில் கடைசி நிமிடத்தில் மாறிய வந்தே பாரத் மெட்ரோ ரயில்
namo bharat rapid rail

இந்தியாவின் முதலாவது வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத் மாநிலம் அகமதாபாத்- பூஜ் இடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். முழுவதும் AC பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா சேவையாக இவ்வகை ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. அகமதாபாத் – புஜ் இடையே 360 கி.மீ.தூரத்திற்கு இயக்கப்படும் இந்த ரயிலின் கட்டணமாக ரூ.455 வசூலிக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்தமாநிலமான குஜராத்துக்கு வந்துள்ளார். அகமதாபாத்தில் சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.இதில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் அடக்கும். குறிப்பாக நம் நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 

இந்த முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் கட்ச் மாவட்டத்தின் பூஜ் இடையே இயங்க உள்ளது. ஏற்கனவே சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் தான் இன்று அறிமுகம் செய்யப்படும் வந்தே மெட்ரோ ரயிலின் சிறப்புகள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதாவது இன்று செயல்பாட்டுக்கு வரும் வந்தே மெட்ரோ ரயில் அகமதாபாத் - பூஜ் இடையே இயங்க உள்ளது. மொத்தம் 360 கிலோமீட்டர் தொலைவை 5 மணிநேரம் 45 நிமிடங்களில் கடக்க உள்ளது.


நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு வரும் நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து புஜ் என்ற இடத்திற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். 360 கி.மீ தூரம் பயணிக்கும் இந்த ரயில் முழுவதும் ஏசி வசதியுடன் கூடிய முன்பதிவில்லா ரயில் ஆகும். இதில் 2 ஆயிரம் பேர் வரை பயணம் செய்ய முடியும். இன்று மாலை இந்த ரயிலை தொடங்கி வைக்க உள்ள நிலையில், ரயிலின் பெயர் ‘வந்தே பாரத்’ என்பதிலிருந்து ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என மாற்றப்பட்டுள்ளது.

இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயங்க உள்ளது. பூஜ் பகுதியில் இருந்து கிளம்பும் ரயில் சனிக்கிழமையும், அகமதாபாத்தில் இருந்து புறப்படும் ரயில் ஞாயிற்றுக்கிழமையும் இயங்காது. மற்ற அனைத்து நாட்களிலும் இருமார்க்கமாக இந்த ரயில் இயங்கும். இந்த ரயில் பூஜ் ரயில் நிலையத்தில் காலை 5.05 மணிக்கு புறப்ட்டு காலை 10.50 மணிக்கு அகமதாபாத்தை வந்தடையும். மறுமார்க்கமாக மாலை 5.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு 11.20 மணிக்கு பூஜ் ரயில் நிலையத்தை அடையும்.

இந்த ரயில் அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க உள்ளது. இந்த ரயில் அஞ்சார், காந்திதாம், பாசாவ், சாமகியாலி, ஹால்வாட், த்ரங்கத்ரா, விரம்காம், சாந்லோடியா, சபர்மதி மற்றும் காலுபார் (அகமபாத் ஸ்டேஷன்) ஆகிய நிலையங்களில் நின்று செல்ல உள்ளார். இந்த ரயில் முழுவதும் ஏசி வசதி கொண்டது. மக்கள் அனைவரும் முன்பதிவு இன்றி ஏறி பயணம் செய்யலாம். அதாவது ரயில் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக கூட டிக்கெட் வாங்கி மக்களால் பயணிக்க முடியும். 

 ரயிலில் 1150 இருக்கை வசதிகள் உள்ளது. குஷன் சோபா வகையில் இருக்கைகள் உள்ளன. அதோடு ரயிலில் 2,058 பயணிகள் நின்றபடி பயணிக்கலாம். இதில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.30 ஆக இருக்கிறது. அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.430 ஆக உள்ளது. வாராந்திர மற்றும் பதினைந்து நாட்கள், மாதாந்திர சீசன் பாஸ்கள் உள்ளன.ஆட்டோமெட்டிக் கதவு, ரயிலின் இருபுறங்களிலும் இன்ஜின்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow