சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 ஆண்டுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 40 வழக்குகளில் 205 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதிமுகவின் கருப்பு, வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவை பயன்படுத்த டி.டி.வி தினகரனுக்கு தடை விதிக்க கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிச்சாமி திரும்ப பெற்றுக் கொண்டார். வழக்கு வாபஸ் பெற்றதை அடுத்து டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில், சரியாக தேர்வு எழுதாததால் வீட்டை விட்டு வெளியேறிய 12-ம் வகுப்பு மாணவி, கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறை, சண்டை காட்சிகள் குறித்து வரும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ் சினிமாவை அரசு வரைமுறை செய்ய வேண்டும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குட்கா முறைகேடு வழக்கில் பென்-ரைவ் மூலம் வழங்கிய கூடுதல் குற்றபத்திரிகையில் பல தகவல் இல்லை என்பது தொடர்பான புகாருக்கு பதில் அளிக்க வேண்டும் என சிபிஐ-க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமானுக்கு எதிராக தொடரபட்ட வழக்கில், சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு வீசப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், தடயங்களை சேகரித்தனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆஜரானார். அவரிடம், TVH நிறுவனத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இருட்டு கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்காவின் கணவர் அக்கடையை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையின் நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.
4 மாத ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியபோது, மூச்சுத் திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ராஜமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை ஒருபக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 20 காசுகள் அதிகரித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கெங்கவல்லி அருகே ஆர்டிஓ வீட்டில் 60 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"சாட்டை துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் பக்கத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அதில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து; அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது” என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரோட்டரி மாவட்டம்-3233 சார்பில் பெண்களின் திறமையை, அறிவை, சுதந்திரத்தை, பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நோக்கத்தோடு வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி கோல்டன் ஸ்பேரோ நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் கே. என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.