தமிழ்நாடு

சிறுமிகளுடன் உற்சாகமாக நடனமாடிய பிரபல நடிகை

பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு முடிந்த அளவு நேரத்தை செலவிட வேண்டும் நடிகை திவ்யா துரைசாமி வேண்டுகோள்

சிறுமிகளுடன் உற்சாகமாக நடனமாடிய பிரபல நடிகை
நடிகை திவ்யா துரைசாமி
கோவை, கோவைபுதூரில் பகுதியில் செயல்பட்டு வரும் "சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு" காப்பகத்துக்கு பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக 36 பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் இந்த காப்பகத்தில் இருந்து வருகின்றனர்.

குழந்தைகளுடன் நடனம்

இந்த காப்பகத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் "வாழை, ப்ளூ ஸ்டார், எதற்கும் துணிந்தவன்" உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை திவ்யா துரைசாமி கலந்து கொண்டு சிறுமிகளை சர்ப்ரைஸ் செய்தார்.

கலை நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுடன் திவ்யா துரைசாமி, சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியது, சிறுமிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கும், சிறப்பு குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மற்றவர்களுக்கு உதவ வேண்டும்

இதைத்தொடர்ந்து பேசிய நடிகை திவ்யா துரைசாமி, "பெண் குழந்தைகளுடன் நடந்த நிகழ்ச்சி மகிழ்ச்சியாக இருந்தது. நமக்கு சிறிதாக தோன்றும் விடயம், மற்றவர்களுக்கு பெரும் உதவியாக கூட இருக்கலாம். எனவே, நம்மால் முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும். பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு முடிந்த அளவு நேரத்தை செலவிட வேண்டும்.அவர்களுக்கு நம்மைப் போன்றவர்கள் உதவ வேண்டும்" என வலியுறுத்தினார்.