தமிழ்நாடு

2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தருவதாகவும், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி கடந்த 9 ஆம் தேதி வரை 8 நாள் சுற்றுப்பயணமாக தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், பிரேசிலில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பங்கேற்ற பின்னர் நேற்று காலை இந்தியா திரும்பினார். இந்நிலையில், 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.

வரும் ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளதாகவும், அரியலூர், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒரு புறம் திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் கூட்டணி மறுபுறம் அதிமுக - பாஜக கூட்டணி என தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் 2 நாட்கள் பயணமாக ஜூலை 27ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டிய ஜூலை 27-ம் தேதி ராஜேந்திர சோழன் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் அரசு விழாவாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜூலை 26ம் தேதி திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், 27ம் தேதி தமிழகம் வருவது உறுதியாகியுள்ளது. ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை திறந்து வைக்க கடந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.