K U M U D A M   N E W S
Promotional Banner

ராஜேந்திர சோழனுக்கு சிலை.. கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் பிரதமருக்கு நன்றி!

அரியலூர் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனுக்கும் மிகப் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமத்தின் சார்பில் அதன் தலைவர் கோமகன் நன்றி தெரிவித்துள்ளார்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி.. பெருவுடையார் கோயிலில் சாமி தரிசனம்!

திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில், 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இன்றிரவு திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தருவதாகவும், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.