K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

சிவகாசி திமுகவில் மேயருக்கு எதிராக போர்க்கொடி.. வெளிநடப்பு செய்த மேயர்..!

சிவகாசியில் நடந்த மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்காமல் மேயர் சங்கீதா இன்பம் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென பெய்த கனமழை..நெற்பயிற்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை..!

அரியலூரில் கடந்த இரு தினங்கள் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நீரில் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

ஊட்டி, கொடைக்கானலுக்கு போறவங்க இதையெல்லாம் கவனத்துல வச்சிகோங்க...கோர்ட் போட்ட அதிரடி  ஆர்டர்

வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு தேவையான கூடுதல் காவல்துறையினரை பணியில் அமர்த்துவதற்கு டிஜிபிக்கு உத்தரவிட்டனர்

திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி...ராமதாஸ் சாடல்

தமிழகத்தில் மிகச்சிறப்பான மனிதவளம் உள்ளது. அதைக் கொண்டு எத்தகைய கடின இலக்கையும் அடைய முடியும். ஆனால், மது, கஞ்சா போதையை கட்டவிழ்த்து விட்டு மனித வளத்தை தமிழக அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது.

22 ஆண்டு கால கோரிக்கை...நிறைவேற்றி கொடுத்த அமைச்சர்...நெகிழ்ந்து போன மக்கள் 

தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அழைத்துச் செல்ல தற்போது பேருந்து சேவை உள்ளதாகவும் சின்னவெண்மணி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தொடரும் சோகம்.. சிறுத்தை தாக்கியதில் பெண்மணி உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் மைனலை அரக்காடு கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் அஞ்சலை என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணியை சிறுத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பால் விவசாயிகளுக்கு தரவேண்டிய ஊக்கத்தொகை என்னாச்சு? விவசாய சங்கம் எழுப்பிய கோரிக்கை

தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு கடந்த நான்கு மாதமாக நிலுவையில் உள்ள ரூபாய் 120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக விடுவித்து பால் உற்பத்தி செய்யும் 8 லட்சம் விவசாயிகளின் நலனை காக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

40 ஆயிரம் பேர் சிறுநீரக தானத்திற்காக காத்திருக்கும் நிலை... அறுவை சிகிச்சை நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்

சிறுநீரக செயலிழப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க,  மூளை சாவு அடைந்தவர்களின்  சிறுநீரகம் மற்றும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட தியாகிகள் நிலத்தில் மருத்துவக் கழிவு.. ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு..!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் மருத்துவக் கழிவுகளை விடுவதை எதிர்த்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தோல்வியடைந்த ஆட்சி நடத்தும் திமுக.. பாஜக மாநில மகளிர் அணி தலைவி விமர்சனம்

பாலியல் குற்றங்களை முதலமைச்சர் தடுக்க தவறிவிட்டதாகவும், இந்த ஆட்சி தோல்வி அடைந்த ஆட்சி என்றும் தமிழக பாஜக மாநில மகளிர் அணி தலைவி  உமாரதி ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

சிலிண்டர் புக் செய்ய கால் பண்ணாலும் இந்தி மொழியா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையா? எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது என மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மருமகள் மீது கை வைத்த மாமனார்... கொதித்துப்போன மனைவி.... கணவனுக்கு ஃபயர் ட்ரீட்மென்ட்

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தீ வைத்து கொளுத்தப்பட்ட மாமனார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

கடன் தொல்லையால் மருத்துவர் எடுத்த முடிவு.. பரிதாபமாக பறிப்போன 4 உயிர்

ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் கடன் ஏற்பட்டதால் மருத்துவர், அவரது மனைவி, இரண்டு மகன்கள் உட்பட நான்கு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today: தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை- சென்னையில் இன்றைய நிலவரம்?

சென்னையில் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று சவரனுக்கு ரூ.440 வரை அதிகரித்துள்ளது.

காசு தந்தா போஸ்ட்.. தவெக நிர்வாகி ஆடியோவால் பரபரப்பு.. ஆக்‌ஷனில் இறங்குவாரா விஜய்?

தமிழக வெற்றிக் கழக கட்சி பொறுப்பிற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகி பிரகாஷம் என்கின்ற குட்டி பணம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு சொல்வதை கேட்க வேண்டிய அவசியம் உள்ளது - திமுக எம்.எல்.ஏ பேச்சு

சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மத்திய அரசு சொல்லக்கூடிய ஒரு சிலவற்றை கேட்க வேண்டிய அவசியம் இருக்கின்றது என ஈரோடு கிழக்குத்தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்பு..!

உசிலம்பட்டி அருகே குழந்தைகள் காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே - கிருஷ்ணசாமி கருத்து

பள்ளிகளில் பாலியல் தொடர்பான விவகாரங்களில் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே என்றும் அதனை நான் வரவேற்கிறேன் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

மகனுக்காக ஓடோடி வந்து பீஸ் கட்டிய தாய் - தெரியாமல் மாணவர் எடுத்த விபரீத முடிவு

இளமாறனின் தாயார் செமஸ்டர் கட்டணத்தை கல்லூரியில் செலுத்தி விட்டு வேலைக்கு சென்று இருந்த நிலையில், செமஸ்டர் கட்டணம் செலுத்தவில்லை என நினைத்து மாணவர் தற்கொலை செய்துள்ளதும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-வது ஆண்டு விழா.. மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி..!

சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 56-வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகையில் ஈடுபட்டனர். 

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்கள்...அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.    

இதய அறுவை சிகிச்சையில் சாதனை - இம்பெல்லா பம்ப் பொருத்தம்

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இதயவியல் துறை மருத்துவர்கள் இதயத்தில் இருந்து ரத்தத்தை பம்ப் செய்து உடலின் பிற உறுப்புகளுக்கு அனுப்புவதற்கு தற்காலிகமாக இம்பெல்லா என்ற பொறியியல் சார்ந்த இதய பம்பை பயன்படுத்தி 80 வயது முதியவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளனர்.

‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை

இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Auto strike: சென்னையில் ஒருநாள் ஆட்டோ ஸ்டிரைக்.. இதுதான் காரணமா?

இரு சக்கர வாகன பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவிற்கு விலக்கு அளிக்க வேண்டும், 12 வருடமாக உயர்த்தாத மீட்டர் கட்டணத்தை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

ஒரு குப்பை தொட்டி கூட இல்லையா..? அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கன்னியாகுமரியில் குப்பைகளை சேகரிக்க ஒரு குப்பை தொட்டி கூட அமைக்காத புகாரில், அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.