கனவா.. கனவா.. நான் காண்பது கனவா.. 70 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,745 க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,745 க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனையாகிறது.
தகவல் அறிந்து கே.கே. நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உள்ளே சிக்கி இருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பழைய பேட்டரி ஸ்கிராப் விற்பனை மோசடி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது சென்னை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் பைக் மோதியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் கொ.ம.தே.க எம்.பி. வீட்டில் திடீர் தீவிபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல ஐஏஎஸ் அதிகாரிகளையும், கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களையும் தெரியும் எனக் கூறி உதவுவதாக ஆசை வார்த்தை காட்டியதாக தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சாமி தரிசனம்
போதைப்பொருள் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் கிரிண்டர் செயலியை தமிழகத்தில் தடை செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் அருண், தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தி வரப்படும் போது சுங்கச்சாவடிகளில் சோதனையின் போது கண்டறியவதில் சிக்கல் இருக்கிறது.
மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உறுதிபடுத்துவதற்கான சான்று என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ரயில்வே தண்டவாளத்தில் காதல் ஜோடி சடலமாக கண்டெடுத்து காவல்துறையினர் விசாரணை
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டவர முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் எனக்கு இந்தக் காது வேலை செய்ய மாட்டேங்குது மிஷின் வைக்க வேண்டும் என்று கூறினார்.
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனையாகும் நிலையில், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தில் விலை இரண்டு முறை உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்து மீண்டும் தங்கம் வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் மெத்தபெட்டமைன், ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் நைஜீரியா நாட்டு கும்பல், திரிபுரா மாநில கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ( ஏப்.10) தமிழ்நாடு வருகிறார். நாளை மறுதினம் அரசியல் ரீதியாக பல்வேறு முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.