2026 சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் திமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இளைஞர் மரணம்
திருப்புவனம் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியானது. இதில் அஜித்குமார் தாக்கப்பட்டதும் குரல்வளையில் காயம் ஏற்பட்டது. உள் உறுப்புகள் சேதம் அடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதாக அறிக்கை வெளியானது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், கடந்த சட்டமன்றத்தேர்தலில்போது நாங்கள் 10 ஆண்டு காலம் மக்களுக்கு சேவை செய்தோம். ஆனால் எங்கள் மீது பொய்யான பிரச்சாரத்தை திமுக செய்தது. அதேபோல கொரோனாவில் நாங்கள் ஆற்றிய பணிகளை கூட விமர்சனம் செய்தார்கள்.
மீண்டும் அதிமுக ஆட்சி
கடந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்கு சகவீதம் 44.91 சதவீதம்தான் இதில் திமுக பெற்ற வாக்கு சதவீதம் 37.7, காங்கிரஸ் பெற்ற வாக்கு சகவீதம் 4.27, விடுதலை சிறுத்தைகள் பெற்ற வாக்கு சதவீதம் 1, சிபிஐ பெற்ற வாக்கு சதவீதம் 1.09, சிபிஎம் பெற்ற வாக்கு சதவீதம் 0.85 ஆகும்.
அதே போல அதிமுக கூட்டணி பெற்ற வாக்கு சகவீதம் 40.14. இதில் அதிமுக பெற்ற வாக்கு சகவீதம் 33.29, பாமக பெற்ற வாக்கு சகவீதம் 3.80, பாஜக பெற்ற வாக்கு சகவீதம் 2.62 ,தேமுதிக பெற்ற வாக்கு சகவீதம் 0.49 குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் 43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தால் மீண்டும் அதிமுக ஆட்சி.
வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
குறிப்பாக இந்த நான்கரை ஆண்டு காலம் திமுக ஆட்சி நடைபெற்று வருவதற்கு 6 சதவீதம் அரசு ஊழியர்கள் வாக்கு வாங்கி தான் காரணம். ஆனால், இன்றைக்கு அந்த அரசு ஊழியர்கள் மனம் மாற்றம் அடைந்துள்ளனர். அதேபோல சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு வாக்குறுதியை கொடுத்து அதையும் நிறைவேற்றவில்லை. இதனால் சிறுபான்மையின மக்கள் மனக்குமுறலுடன் உள்ளனர்.
அதேபோன்று விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, இன்றைக்கு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பள்ளிக்கு செல்லும் சிறுவன் மர்மமான முறையில் மரணம். இதெல்லாம் இன்றைக்கு அரசுக்கு எதிராக நிலையில் உள்ளது.
சட்டம்-ஒழுங்கு மிகவும் சந்தி சிரிக்கிறது
இன்றைக்கு சிவகங்கையில் நடைபெற்ற லாக் அப் மரணத்திற்காக தலைமைச் செயலத்தில் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டத்தை நடத்தி, மக்களை திசை திருப்பி மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மிகவும் சந்தி சிரித்து வருகிறது. குறிப்பாக போதைப்பொருட்கள் இன்றைக்கு கிராமங்களில் வேரூன்றி விட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையே கேள்வி குறியாகிவிட்டது.
இன்றைக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் திமுக மீது கோபத்தில் இருப்பதால் அவர்கள் வாக்குகள் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக எதிராக அமையப்போகிறது. எடப்பாடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் சட்ட ஒழுங்கிற்கு தீர்வு காண முடியும். அதே போன்று விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும் என மக்களே கூறுகிறார்கள். இன்றைக்கு ஸ்டாலினால் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் போடும் உத்தரவுக்கு யாரும் செயல்படவில்லை. நாள்தோறும் ஆய்வுகள், அறிக்கைகள் மட்டும் வெளிவருகிறது. ஆனால் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.
முதலமைச்சர் பச்சைப்பொய் சொல்கிறார்
இன்றைக்கு முதலமைச்சர் லாக்கப் மரணத்திற்கு பச்சைபொய் சொல்கிறார். ஹார்ட் அட்டாக்கால் இறந்து போய் உள்ளார் என கூறியுள்ளார்.ஆனால், இது குறித்து நீதியரசர்கள் அஜித் என்ற இளைஞர் உடலில் 18 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது அவர் என்ன தீவிரவாதியா.? இன்று கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
இன்றைக்கு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அளவில் மனசாட்சி இல்லாமல் ஸ்டாலின் பேசுகிறார். இன்றைக்கு மக்கள் கடுமையான கொந்தளித்து உள்ளார்கள் இந்த கொந்தளிப்பு ஆட்சியை தூக்கி எறியும்” என தெரிவித்துள்ளனர்