முதலமைச்சருக்காக நாங்கள் காத்திருக்க வேண்டுமா? – பெண்கள் போலீசாருடன் வாக்குவாதம்!
முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காக நீண்ட நேரம் பேருந்தில் காக்க வைத்ததால் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காக நீண்ட நேரம் பேருந்தில் காக்க வைத்ததால் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவைச் சேர்ந்த சேவூர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருந்தபோது ஏழு மடங்கு சொத்து சம்பாதித்ததாகவும், 2016ஆம் ஆண்டு 2 கோடி சொத்து இருந்த நிலையில் 2021ஆம் ஆண்டு14 கோடி மதிப்பில் சொத்துக்கள் சேர்த்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முக்கிய ஆவணங்கள் மற்றும் 4 ஹார்ட் டிஸ்குகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக நீர் அதிகரித்து காணப்படுகிறது.
வேளாண்மையில் தமிழ்நாடு மிகப்பெரிய பின்னடைவில் உள்ள நிலையில், வேளாண் உற்பத்தி குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை தவறானது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை நடத்தி வரும் அவரது சகோதரர் லட்சுமணன் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முத்துச்சாமி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மற்றும் நாளை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையனை, 21 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தென் தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களை வெளிக் கொணரும் முயற்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை கடந்த சில ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
heavyrain,madurai,மதுரை,கோடைமழை,வானிலை,Motorists are scared,due to water flowing on the road
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மலர் கண்காட்சியும் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், மீரான்குளம் பகுதி சிந்தாமணி சாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் கார் விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வால்பாறையில் அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 40 பேர்களுக்கு மேல் காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்மொழி கொள்கையை ஏற்காமல் இருப்பதால் ரூ.2,152 கோடியை நமக்கு வழங்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் சில நாட்களில் 62-வது மலர் கண்காட்சி துவங்க உள்ள நிலையில் மலர்கள், கொய்மலர்கள், காய்கறி வகைகள் காட்சிபடுத்தும் அரங்குகள், ஸ்டால்கள், அமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பாக அதன் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசு இலவச ஏசி தருவதாகவும், பிரதமர் திட்டத்தில் இலவச ஏசி வழங்குவதாகவும் போலி விளம்பரங்கள் இணையதளத்தில் கடந்த ஒரு வாரமாக சுற்றி வருகின்றன. இலவச ஏசி பெற வீடியோவில் காணும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடும் நிலையில், இதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் தங்க நகைகளை வாரி வழங்கியுள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி. இதுத்தெரியாமல் நகைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த குடும்பத்தினருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
எரிவாயு தகன மேடையில் தகனத்திற்காக பிணங்கள் காத்திருந்த சம்பவம் விவாதங்களை எழுப்பிய நிலையில் எதிர்பாராத கோடை மழையால் ஏற்பட்ட மின் தடை தான் காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் வாக்குறுதிகளில் முதன்மையான மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பு முறை குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்.