சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய இளைஞர் அஜித்குமார் என்பாரை நகை திருட்டு புகார் தொடர்பாக போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 5 போலீசார் மீது கொலை வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மேலும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதேபோல், துணைக் கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தரேலால் சுரேஷ் கடந்த 3 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தார். மேலும் அவரிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் போலீஸார் ஒப்படைத்தனர்.
மேலும், அஜித்குமாரை போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்தவர் உட்பட பல சாட்சிகள் தங்களுக்கு பயமாக இருப்பதாகவும், போலீஸ் பாதுகாப்பு கேட்டும் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர்.
முன்னதாக, நகை திருட்டு புகார் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமாரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின்போது அஜித்குமாரை போன்றே நவீன்குமாரையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசார் தன்னையும் தாக்கியதாக நவீன்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நவீன்குமார் காவலர்கள் தாக்கியதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவகள் சிகிச்சை அளித்து உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.