ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கமலக்கண்ணன், “ நாளை அகில இந்திய அளவில் 42 சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தால் தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைப்பது போல் தெரியவில்லை.
பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது
மத்திய அரசை வலியுறுத்தி வைத்துள்ள கோரிக்கைகள் எல்லாம் மாநில அரசை வலியுறுத்த வேண்டியவை. நல வாரியங்கள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 50,000 கோடி வருமானம் வரும் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு 9000, 10,000 எனச் சம்பளம் கொடுக்கப்படுகிறது. மத்திய அரசை கேள்வி கேட்கும் தொழிற்சங்கங்கள், மாநில அரசை ஏன் கேள்வி கேட்கவில்லை.?
அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் 100 சதவீதம் தொழிலாளர்கள் நாளை வேலைக்கு செல்லுவதால் பேருந்துகள் ஓடும். கண்டிப்பாக நாளை வேலைக்கு செல்வோம். எங்களது கூட்டமைப்பில் 23 சங்கங்கள் உள்ளன.மத்திய, மாநில அரசுகளின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் நாளை செயல்படும். எங்களது தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்களும் தொழிலாளர்களும் வேலைக்கு செல்வதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.
போராட்டத்தில் கலந்து கொள்ளாது
ஆட்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுப்பதை தொழிற்சங்கங்கள் யாரும் எதிர்த்து போராடவில்லை.தமிழக அரசு செய்யும்போது வாய்மூடி இருந்து விட்டு, மத்திய அரசு மட்டும் கேட்கிறார்கள்.நான்கு தொழிலாளர் சட்டங்களை மாற்றிவிட்டதாக சொல்கிறார்கள். இந்த சட்டங்கள் என்ன என்பது தொழிலாளர்களுக்கு தெரியாது. மத்திய அரசு எதிர்க்க வேண்டும் என்பதற்காக இதை செய்கிறார்கள்.
நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கமும், எங்கள் கூட்டமைப்பும் கலந்து கொள்ளாது. தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களுக்காக போராடாமல், எங்கோ உள்ளவர்களுக்காக போராடுகிறார்கள்.
சொல்லாமலே போராட்டம்
நாளை ஆட்டோக்கள் அனைத்தும் ஓடும், எங்களது தொழிற்சங்கத்தில் அதிகப்படியான உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.தமிழக அரசு ஒட்டுமொத்தமாக விடுமுறை விட்டால் வேண்டாமானால் அனைத்தும் ஓடாமல் இருக்கும். எங்களது தொழிற்சங்கத்தில் 42 ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பேருந்துகளை இயக்குவார்கள். ஆட்டோ ஓட்டுவார்கள், நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வார்கள்.
மத்திய அரசை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்வது எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் மாநில அரசு எதிர்த்து ஒன்றுகூட கேட்கவில்லை.மாநில அரசு தொழிலாளர்களுக்கு என்ன செய்தது? சுருக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களால் என்ன மாதிரியான பாதிப்புகள் என்பது குறித்து தொழிலாளர்களுக்கு இவர்கள் சொல்லாமலே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.தேர்தல் நேரம் என்பதால் போராட்டம் செய்ய வேண்டும் என்பதற்காக கூட இதைச் செய்யலாம்.
பாஜக கூட்டணியில் இருப்பதால் அல்ல
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தல் போன்ற கோரிக்கைகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் இந்த நான்கு ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக போக்குவரத்தில் 1,22,000 பேர் வேலை செய்ய வேண்டும். எங்களது தொழிற்சங்கத்தில் 42 ஆயிரம் பேரும், கூட்டமைப்பில் 20 ஆயிரம் பேரும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வேலைக்குச் செல்வார்கள்.
நாங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் பாஜக கூட்டணியில் இருப்பதால் அல்ல. நாங்கள் தொழிற்சங்கத்தைப் பற்றி மட்டும் தான் பேசுகிறோம்.தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் பற்றிய கோரிக்கைகள் ஏதாவது இருந்திருந்தால் நாங்களும் கலந்து கொண்டிருப்போம். அரசியல் செய்வதற்காக மத்திய அரசை எதிர்ப்பதால் நாங்கள் இதில் கலந்து கொள்ளவில்லை” என தெரிவித்தார்.