மயிலாடுதுறை அருகே மேலையூரில் ஸ்ரீமகாசதாசிவ பீடத்தின் பீடாதிபதி சுவாமிநாத சிவாச்சாரியாரின் மணிவிழா இன்று நடைபெற்றது.இதில், திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்கள், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன்சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத், “தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி அமைய வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்ற போர்வையில் தொடர்ந்து ஆன்மீகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். சனாதன தர்மத்தை இழிவுபடுத்துகின்றனர். தருமை ஆதீனம் பல்லக்கு திருவிழாவிற்கு தடை ஏற்படுத்தினார்கள். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
ஆதினங்களுக்கு நிர்பந்தத்தை திராவிட மாடல் அரசு ஏற்படுத்துகிறது. குமரகுருபர சுவாமிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். திருச்சி விராதனூர் பகுதியில் ஸ்டேன் ஸ்சுவாமி என்று கூறக்கூடிய பாதிரியாருக்கு உருவச்சிலை திறந்து வைத்திருக்கிறார்கள். அதில், கனிமொழி, திருமாவளவன் கலந்துகொண்டு கடுமையாக பேசியிருக்கிறார்கள். பிரதமர் மோடியை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியவருக்கு தமிழகத்தில் சிலை திறப்பது என்ன அர்த்தம். நக்சல் அமைப்பை சேர்ந்த ஸ்டேன் ஸ்சுவாமி பாதிரியார் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும்.
விசிக மெளனம் காக்கிறது
காவிரியில் திறக்கப்பட்ட நீர் கடைமடைவரை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விளைநிலங்கள் தற்போது, வீட்டுமனைகளாக மாறிவருகிறது. விவசாயிகளின் விரோத அரசாக இந்த அரசு நடந்துகொண்டு இருக்கிறது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழலை சரிசெய்தாலே மின்வாரியம் நஷ்டத்தில் இயங்காது. விலைவாசி உயர்வை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். 24 பேர் லாக்கப் டெத்தில் இறந்துள்ளனர். அஜித் கொலையில் போலீசார் கூலிப்படையாக மாறியிருப்பது போல் உள்ளது. எடப்பாடி ஆட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு, மின்தட்டுப்பாடு கிடையாது.
2026-ல் தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும். கூட்டணி கட்சியினரை திருப்திப்படுத்த அரசு செலவில் தகைசால் விருது வழங்குகிறது திமுக அரசு. பட்டியல் இனமக்கள் படும் துன்பத்தைப்பற்றி பேசவேண்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி பேசாமல் மௌனம் காக்கிறது” என தெரிவித்தார்.