நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், வேலையின்மைப் பிரச்சினைக்கு தீர்வுகாண காலி பணியிடங்களை நிரப்புதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் வேலை நாட்கள் மற்றும் ஊதியத்தை அதிகரித்தல், இத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்தப் போராட்டத்தில் அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள், வருவாய் துறை அலுவலர் சங்கங்கள், போன்றவை இந்த வேலையில் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.டி,சி,யு, திமுகவை சேர்ந்த தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆகியவை இந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அதே சமயம் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் மட்டும் இதில் பங்கேற்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்குகின்றன.வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும் மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒரு நாள் ஊதியம் வழங்கப்படாது எனவும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.