தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலைய இடத்திற்கான பத்திரப்பதிவு தொடங்கியது

5 கிராமங்களைச் சேர்ந்த 19 பட்டாதாரர்களிடமிருந்து நிலம் எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து, 9.22கோடி மதிப்புடைய நிலத்தினை தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டது.

பரந்தூர் விமான நிலைய இடத்திற்கான பத்திரப்பதிவு தொடங்கியது
பரந்தூர் விமான நிலைய இடத்திற்கான பத்திரப்பதிவு தொடங்கியது
பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்டமானது அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீடு தொகையை வழங்க கோரி நில உரிமையாளர்கள் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.

நிலங்கள் பத்திரப்பதிவு

அதன் அடிப்படையில் தமிழக அரசு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு நில மதிப்பினை உயர்த்தி நில மதிப்பு நிர்ணயம் செய்து கடந்த 25ம் ஆண்டு அரசாணையை பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து முதலில் ஐந்து கிராமங்கள் அதாவது பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர் மற்றும் அக்கமாபுரம் போன்ற பகுதிகளில் உள்ள எட்டு பேர் உள்ளூர் பகுதி சேர்ந்தவர்களும் அதேபோன்று 11 பேர் வெளி ஊரை சேர்ந்தவர்களும் என மொத்தம் 19 பட்டாதாரர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தாங்கள் நிலம் எடுப்பிற்கு சம்மதம் தெரிவித்து 17.52 ஏக்கர் பரப்பு ரூபாய் 9.22 கோடி மதிப்பு கொண்ட நிலத்தினை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு தற்போது பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

மேலும் பதிவு செய்து கொடுத்த நில உரிமையாளர் அனைவருக்கும் இன்று நிலத்திற்கான இழப்பீடு தொகையை அவர் வங்கி கணக்கில் செலுத்தும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் அதிர்ச்சி

குறிப்பாக பரந்தூர் விமான நிலையம் திட்டம் அமைந்தால் குடியிருப்பு, நீர் நிலைகள், விளைநிலங்கள் முற்றிலும் அழிந்து போகும் என ஆயிரம் நாட்களுக்கு மேலாக பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலும் இத்திட்டத்திற்கு எதிராக சட்ட போராட்டங்களை அப்பகுதி மக்கள் முன்னெடுத்திருக்கும் நிலையில், தற்போது பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்டத்தில் பாதிக்கப்படும் சில மக்களே அரசாங்கத்திற்கு நில பத்திரப்பதிவு செய்யும் செயல் போராட்டக்காரர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.