சென்னை அண்ணா சாலை தபால் நிலையத்துக்கு அருகில் மத்திய அரசுக்கு 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 13 தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில் அதிமுக சார்பில் உள்ள அண்ணா தொழிற்சங்க வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றனர்,தற்பொழுது அண்ணா சாலை தபால் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 13 தொழிலாளர் சங்கத்தினரை காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்தனர். தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணா சாலையில் அண்ணா சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டத்தின் போது, செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு தலைவர் சௌந்தர்ராஜன் பேசியதாவது, இன்று 11 அனைத்திந்திய மத்திய அமைப்புகள் , 40 கும் மேற்பட்ட துறை வாரிய அமைப்புகள், இந்தியா முழுவதும் இருக்கும் விவசாய அமைப்புகள் விவசாய தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகள் முன்னிலையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் வேலை நிறுத்தத்தில் 30 முதல் 35 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என எங்கள் மத்திய தொழிற்சங்கத்தின் கணிப்பாக உள்ளது.எல்லா மாநிலங்களிலும் இந்த வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசாங்கத்தின் கொள்கையால் மிகக் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. விலைவாசி ஏறி இருக்கிறது என்று கூறப்படாமல் ஏற்றப்பட்டுள்ளது என கூறுவது தான் சரியான கருத்தாக இருக்கும் என்று கூறினார். பாகிஸ்தானை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 21 ரூபாய் அதிகமாக உள்ளது. ஜிஎஸ்டி வழியாக மத்திய அரசு அடிக்கும் கொள்ளை வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.
வேலைவாய்ப்பை பெருக்குவது என்பது மத்திய அரசாங்கத்தின் திட்டத்தில் இல்லை, நிரந்தர வேலை வாய்ப்பினை பறித்துவிட்டு அதில் கார்ப்பரேட் தொழிலாளர்களை புகுத்துவது என்பதே மத்திய அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கிறது. எதற்காக 29 சட்டங்களை நான்கு தொகுப்புகளாக தீட்டி உள்ளனர். இவர்கள் மார்தட்டி அறிவித்த அனைத்து தொகுப்புகளும் தொழிலாளர்களுக்கு எதிரானது என்றும், இந்த சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகளுக்கு எதிராக போடப்பட்டுள்ள சட்டங்களை முழுமையாக அகற்ற வேண்டும் விவசாயிகளுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
குறைந்தபட்ச கூலி என்பது 26 ஆயிரம் ரூபாய் இதனை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்த அவர், துறைசாரா தொழிலாளர்கள் அதிகப்படியாக இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் இந்தியாவில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட உற்பத்தி மதிப்பினை அவர்கள் பங்கு செலுத்துகிறார்கள். இவர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி சமூக முன்னேற்ற திட்டங்கள் செய்து விட வேண்டும். இது முடியாத காரியம் அல்ல, பெரும் முதலாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டரை லட்சம் கோடி தினமும் கடந்த 10 ஆண்டுகளில், 12 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது. இந்த வேலை நிறுத்தம் என்பது மத்திய அரசுக்கு தொழில் சங்கங்கள் விடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது செப்டம்பர் மாதத்தில் அந்த கமிட்டியின் முடிவு அறிவிக்கும்படி தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. குழுவின் முடிவுக்குப் பிறகு திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தின் காரணமாக நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம், தொழிலாளர்கள் ஊதிய இழப்பு என்று பார்த்தாலே அது ஒரு நாளைக்கு 150 கோடி ரூபாயாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இன்றைய தினம் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள் ஆனால், அதிமுக மட்டும் கலந்து கொள்ளவில்லை. இந்த போராட்டம், பாஜகவுக்கு எதிராக உள்ளதால் அரசியல் காரணத்தினால் கலந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்ற தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறுவதற்கு எந்த விதமான உரிமையும் கிடையாது , சட்டப்படி வேலை நிறுத்தத்திலையோ அல்லது எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது சட்டத்திற்கு புறமானது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.