சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோயிலில் பெண் பக்தரின் தங்க நகை திருடப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் ஊழியர் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் திருப்புவனம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 6 தனிப்படை போலீசாரை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. ஆஷித் ராவத் உத்தரவிட்டார்.
அஜித்குமார் மரண வழக்கு
இதற்கிடையில், அஜித்குமார் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும், நீதிபதி வேங்கடபிரசாத், அஜித்குமாரின் உடலில் இருந்த காயங்கள் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த நிலையில், அவரது பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கை வெளியானது.
அதில், அவரது உடலில் 18 வெளிப்புற காயங்கள் இருப்பதாகவும், கடும் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மண்டையோடு, கை, முதுகு, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இச்சம்பவத்தில் தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
சீமான் ஆறுதல்
மேலும் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாக பேசி ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் முகஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அஜித் குமார் லாக்கப் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்புவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் கட்சி சார்பில் நிதியுதவி அளித்தார்.
நடவடிக்கை எடுக்கவில்லை
இதைத்தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான் , “அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகள் வெளி வருகிறது. திரும்பத் திரும்ப ஏமாற்றி உள்ளார். ஏன் அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், அவர் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவரா?” என்றார்.
மேலும் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு 80 கி.மீ. தொலைவில் வேலை கொடுப்பதற்கு பதிலாக, வேலை இல்லை என்று சொல்லிவிட்டுபோக வேண்டியதுதானே, இது வேலை இல்லை..வேண்டாத வேலை என சீமான் காட்டமாக பேசினார்.