தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,935 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் இந்தத் தேர்வை எழுத, மாநிலம் முழுவதும் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 50,144 பேர் விண்ணப்பித்திருப்பதால், அவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக 100-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.தேர்வர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க 175 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களைத் தவிர, துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
"கோவை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு எழுத 50,144 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்கு முன்னதாகவே வந்துவிட வேண்டும். தேர்வர்கள் காலை 8:30 மணி முதல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு காலை 9:30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12:30 மணி வரை நடைபெறும். காலை 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க, ஒவ்வொரு மையத்திலும் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் அனைவரும் வீடியோ மூலம் கண்காணிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில், இன்று காலை தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் 300 பேர் தேர்வு எழுதுகின்றனர். அங்கு 7 மாதக் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்த ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்த லீஜா என்ற இளம் பெண், தனது குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றார். தற்போது, தேர்வர்கள் முழுமையான பரிசோதனைக்குப் பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு தேர்வு எழுதி வருகின்றனர்.