ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சான் என்கிற முருகேசன் (வயது 50). ஆட்டிறைச்சி வியாபாரி. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரரான வெள்ளியங்கிரி(34) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு நடப்பது வழக்கம் என கூறப்படுகிறது.
வியாபாரி வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி தனது வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து முருகேசனை வெட்ட முயற்சித்துள்ளார். அரிவாளுடன் அந்த வெள்ளியங்கிரியை கண்டு உடனடியாக அங்கிருந்து முருகேசன் ஓட முயன்றுள்ளார். அப்போது வெள்ளியங்கிரி துரத்திச்சென்று முருகேசனை பிடித்து தலை மற்றும் தோள் பகுதியில் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து வெள்ளியங்கிரி அரிவாளுடன் பவானிசாகர் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். தகவல் அறிந்த பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞர் வாக்குமூலம்
இது குறித்து முருகேசனின் மகன் சரண்ராஜ் பவானிசாகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளியங்கிரி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, “முருகேசன் என்னைப் பற்றியும் எனது குடும்பத்தை பற்றியும் தொடர்ந்து அவதூறு பேசியதால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. சம்பவத்தன்று முருகேசன் மதுபோதையில் என்னை பற்றியும் எனது குடும்பத்தை பற்றியும் மீண்டும் அவதூறு பேசியதால் நானும் மதுபோதையில் அரிவாளை எடுத்து முருகேசனை துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்தேன்” என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் முருகேசன் மீது கொலை வழக்கு பதிந்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.