செமி கண்டக்டர் துறையில் புரட்சி.. 'சிப்'களின் உற்பத்தியை அதிகரிப்பதே இந்தியாவின் தாரக மந்திரம் - மோடி

மத்திய அரசின் கொள்கையால் செமி கண்டக்டர் உற்பத்தியில் உலகளவில் இந்தியா நிச்சயம் தடம் பதிக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். செமிகான் இந்தியா 2024 மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Sep 11, 2024 - 14:39
 0
செமி கண்டக்டர் துறையில் புரட்சி.. 'சிப்'களின் உற்பத்தியை அதிகரிப்பதே இந்தியாவின் தாரக மந்திரம் - மோடி
modi launch SEMICON India 2024

இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சிப்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும். உலகில் உள்ள ஒவ்வொரு சாதனத்திலும் இந்தியாவில் தயாரான சிப் இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செமிகான் இந்தியா 2024 மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். செமிகண்டக்டர் எதிர்காலம் தொடர்பான கருப்பொருளுடன் செப்டம்பர் 13ஆம் தேதி வரை மாநாடு நடைபெறுகிறது. செமிகண்டக்டரின் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் கொள்கையை வெளிப்படுத்த மாநாடு தொடங்கப்பட்டது. உலகளாவிய தலைவர்கள், நிறுவனங்கள், செமி கண்டக்டர் நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

செமிகான் இந்தியா 2024 மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, உலகளவில், வடிவமைத்தல் துறையில் 20 சதவிகித திறமையாளர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் இது இன்னும் அதிகரித்து வருகிறது. செமி கண்டக்டர் துறையில் 85 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்களை தயார்படுத்தி வருகிறோம்.

சிப்கள் கொள்முதலில் இந்தியா முக்கியமான நாடாக உள்ளது. இதன் மூலம் உலகின் சிறந்த பொது கட்டமைப்பைஉருவாக்கி உள்ளோம். இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சிப்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும். உலகில் உள்ள ஒவ்வொரு சாதனத்திலும் இந்தியாவில் தயாரான சிப் இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

இந்தியாவில் செமி கண்டக்டர் துறையில் புரட்சி ஏற்படும் விளிம்பில் உள்ளது. இத்துறையில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில், நவீன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.நாட்டில் 'சிப்'களின் உற்பத்தியை அதிகரிப்பதே இந்தியாவின் தாரக மந்திரம். செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளோம். மத்திய அரசும் ஆதரவு அளிக்கிறது.அரசின் கொள்கைகளால் 1.5 டிரில்லியன் முதலீடு வந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow