எல்லா சூழல்களிலும் அண்ணணாக, அரணாக நிச்சயம் நிற்பேன் - த.வெ.க தலைவர் விஜய் கடிதம்

எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும் இருப்பேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Dec 30, 2024 - 10:49
Dec 30, 2024 - 10:57
 0
எல்லா சூழல்களிலும் அண்ணணாக, அரணாக நிச்சயம் நிற்பேன் - த.வெ.க தலைவர் விஜய் கடிதம்
எல்லா சூழல்களிலும் அண்ணணாக, அரணாக நிச்சயம் நிற்பேன் - த.வெ.க தலைவர் விஜய் கடிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அவர் கைப்பட எழுதி வெளியிட்டுள்ள கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், “‘அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொனா வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது நெரிந்ததே.

அதற்காகவே இக்கடிதம்.. எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பெண்களுக்காக தவெக தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதம் கவனம் பெற்றுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow