ஹிஸ்புத் தஹ்ரீர் தீவிரவாத அமைப்பு..2 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்ற பத்திரிக்கை தாக்கல்..!
தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரீர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் மீது, என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரீர் தீவிரவாத அமைப்புச் சேர்ந்த இரண்டு பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு தொடர்பான வழக்கில் கைதான அப்துல் ரகுமான் மற்றும் முஜிப்பூர் ரகுமான் ஆகிய இருவர் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக இவர்கள் இருவரும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதும் ஹிஸ் புத் தஹ்ரீர் கொள்கைகளை பரப்பும் நோக்கத்தில் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் இஸ்லாமிக் கிலாபத் கொள்கைகளை பரப்புவதற்கும் முக்கியமாக செயல்பட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பில் தொடர்புடைய நபர்கள் மாணவர்களுக்கு ஹிஸ்புத் தஹ்ரீர் தீவிரவாத அமைப்பு தொடர்பாக ரகசிய வகுப்புகள் எடுத்து ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறும்படங்கள் மேற்கொண்டு அவற்றை இந்தியாவிற்கு எதிரான கொள்கைகளில் பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே முக்கிய குற்றவாளிகளான ஹமீது உசைன், அகமது மன்சூர், அப்துல் ரகுமான், முகமது மவுரிஸ், காதர் நவாஸ் ஷெரீப் மற்றும் அகமது அலி ஆகிய 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த இரண்டு வழக்குகளை அடிப்படையாக வைத்து என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?