மூதாட்டியின் இறுதி மரியாதை – பேரக்குழந்தைகள் செய்த சுவாரஸ்யமான செயல்

மூதாட்டியின் ஆசையை பேரக்குழந்தைகள் நிறைவேற்றிய சுவாரஸ்யம்

Dec 20, 2024 - 10:36
Dec 21, 2024 - 12:19
 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற மூதாட்டியின் இறுதி மரியாதை செய்யப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி அருகே சின்னப்பாலார்பட்டியை சேர்ந்த 96 வயது மூதாட்டி நாகம்மாள் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தனது இறப்பிற்கு பின் இறுதி சடங்கு நிகழ்வை மற்றவர்களை போல சோகத்தோடு இல்லாது, ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் விமரிசையாக கொண்டாடி சந்தோசமாக வழி அனுப்ப வேண்டும் என மூதாட்டி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

 அதன்படி மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, பேரன் பேத்திகள் இணைந்து ஆடல் பாடல் நிகழ்ச்சி, ரேடியோ, கும்மியாட்டம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சி என கொண்டாடி இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர். இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow