பாண்டிய மன்னனாக முடி சூடிய சுந்தரேஸ்வரர்.. நரியை பரியாக்கி மதுரையில் ஆடிய திருவிளையாடல்

ஆவணி மூலம் திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் பாண்டிய மன்னனாக சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.

Sep 12, 2024 - 07:12
 0
பாண்டிய மன்னனாக முடி சூடிய சுந்தரேஸ்வரர்.. நரியை பரியாக்கி மதுரையில் ஆடிய திருவிளையாடல்
aavani moolam festival

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி வரை திருவிழாக்கள் களைகட்டும். சிவபொருமான் நிகழ்த்தும் திருவிளையாடல்களை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடத்தும் வகையிலும் ஆவணி மூலம் திருவிழா கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டிற்கான ஆவணி மூலம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் வகையில் சிறப்பு அலங்காரம் தொடர்ந்து நடைபெறுகிறது. கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு மோட்சம், மாணிக்கம் விற்ற திருவிளையாடல், தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடல், உலவாக்கோட்டை அருளிய லீலை ஆகிய அலங்காரங்களைத் தொடர்ந்து நேற்று முன்தினம், பாணனுக்காக அங்கம் வெட்டிய திருவிளையாடல் லீலை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூலம், அந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக இந்தநாள் உள்ளது. காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் கொளுத்தும், மேக மூட்டத்துடன் மறைந்து தோன்றினால் பருவம் தவறி மழை பெய்து வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தும், எப்படிப் பார்த்தாலும் அது அழிவைத் தருவதாகவே இருக்கிறது. மாணிக்கவாசக சுவாமிகளுக்காக சுந்தரேஸ்வரப் பெருமான் மதுரை மாநகருக்கு எழுந்தருளி அருள் பாலித்த தினம் இதுவாகும். எதற்காக சிவபெருமான் மதுரைக்கு வந்தார் என்பதை நரியை பரியாக்கி லீலை, பிட்டுக்கு மண் சுமந்த லீலை என இன்றைக்கும் கொண்டாடுகின்றனர்.

மதுரையை ஆட்சி செய்த அரிமர்த்தன பாண்டியனின் அரண்மனையில் மாணிக்க வாசகர் அமைச்சராக இருந்தார். படைக்காகக் குதிரைகள் வாங்க பொருளைக் கொடுத்து மந்திரியாகிய மாணிக்க வாசகரை அனுப்பி வைத்தார் மன்னர். குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் குதிரைகளுடன் திரும்பி வருவார் என்று மன்னர் எதிர்பார்த்தார். நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன. குதிரைகளையும் காணோம் அமைச்சர் மாணிக்கவாசகரையும் காணோம். அப்பொழுதுதான் தெரிந்தது. மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொருளைக் கொண்டு திருப்பெருந்துறைக் கோவிலுக்குத் திருப்பணி செய்துவிட்டான் அமைச்சர் மாணிக்கவாசகர். 

பாண்டிய மன்னனின் மகாகோபத்துக்கு ஆளானார் மாணிக்கவாசகர். என்ன செய்வதென்று அறியாமல், சிவபெருமானை மனமுருகி வேண்டினார். சிவகணங்களைக் குதிரைப் பாகர்களாகவும், நரிகளைப் பரிகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பிவைத் தான் சிவபெருமான்.


மன்னனும் மகிழ்ந்தான் ஆனால், அன்று இரவே மறுபடியும் அந்தப் பரிகள் எல்லாம் நரிகளாகி ஓடிவிட்டன. இம்முறை கட்டுக்கடங்கா கோபம் பாண்டியனுக்கு மாணிக்கவாசகரை சுடு மணலில் கட்டிப் போட்டார்.  இறைவன் திருவருளால் வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது மணலும் குளிர்ந்தது. இதனைக் கண்டு அரசன் ஆண்டவன் அருள்பெற்றவன் தம் அமைச்சர் என்ற பெருமைப்பட்டு அவனை விடுவித்ததாக தலபுராணம் கூறுகிறது.

சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் என்ன தான் தங்கள் பணியைச் செய்தாலும், இறைவனுக்கு அவை பணியாளர்கள் தான். அவையனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை. கிரகங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இறைவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து. நல்ல சீதோஷ்ணம் வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம். மதுரையில் இப்போது சிவபெருமானில் ஆட்சி நடைபெறுகிறது. மூல நட்சத்திரத்திற்குரிய கிரகம் கேது. வாழ்க்கையின் நிலையாமையை பற்றிய ஞானத்தை தருபவர் இவர் கடவுளின் திருவடியே நமக்கு சரணாகதி என்று இவர் உணர்த்துகிறார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow