தங்க கவசத்தில் ஜொலித்த மணக்குள விநாயகர்.. ரூ.20 லட்சத்தில் ஜொலித்த ஏலேல சிங்க விநாயகர்

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் விதம் விதமான அலங்காரங்களில் ஜொலிக்கிறார் விநாயகர். புதுச்சேரியில் மணக்குள விநாயகர் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். அதே போல காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர் ரூ. 20 லட்சம் ரூபாய் நோட்டுக்களில் அருள்பாலித்தார்.

Sep 7, 2024 - 12:59
 0
தங்க கவசத்தில் ஜொலித்த மணக்குள விநாயகர்.. ரூ.20 லட்சத்தில் ஜொலித்த ஏலேல சிங்க  விநாயகர்
vinayagar chathurthi festival

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் விதம் விதமான அலங்காரங்களில் ஜொலிக்கிறார் விநாயகர். புதுச்சேரியில் மணக்குள விநாயகர் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். அதே போல காஞ்சிபுரம் ஏலேல சிங்க  விநாயகர் ரூ. 20 லட்சம் ரூபாய் நோட்டுக்களில் அருள்பாலித்தார்.

புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பாக மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுது. 

தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டும், உற்சவர் பல்வேறு வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்டு அமெரிக்கன் டைமண்ட் நெக்லஸ் அணிவிக்கப்பட்டு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை மனமுருகி தரிசனம் செய்தனர் மேலும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதே போல கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் பிரசித்திப்பெற்ற ஏலேல சிங்க  விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதிய  ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு,சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் விநாயகரை பொது மக்கள் வழிபட்டு செல்வது வழக்கம். 

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று  ஏலேல சிங்க விநாயகருக்கு 32 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், திருநீறு போன்ற அபிஷேக பொருட்களா  சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. பின்னர் விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு ரூ.20லட்சம் மதிப்புள்ள 1ரூபாய்,2ரூபாய், 5ரூபாய், 10ரூபாய், 20ரூபாய்,50ரூபாய், 100ரூபாய், 200ரூபாய்,500ரூபாய் ஆகிய புதிய ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும்,  அதாவது ஓலை கொண்டு குடிசை அமைப்பது போல  புதிய  பண நோட்டுகளால் விநாயகர் கருவறையில் குடிசை போன்று வடிவமைத்து, ஏலேல சிங்க விநாயகருக்கும் 500 ரூபாய் 200 ரூபாய் பண கட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு  பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் புதிய ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகரை பயபக்தியுடன் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மேலும் இந்த விநாயகர் அலங்காரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் நிர்வாக தலைவர் குப்புசாமி, முதல் ஆண்டு ரூபாய் நாணயங்களால் அலங்காரம் செய்தோம்,பின் ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்காரம் செய்ய ஆரம்பித்தோம்.

இந்த ஆண்டு 17-ஆம் ஆண்டாக ரூ.20லட்சம் மதிப்புடைய புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் மூலம் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடமும் இதேபோல ரூ.15லட்சம் மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்காரம் செய்திருந்தோம் என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow