Today Horoscope: இன்றைய ராசிபலன் செப்டம்பர் 4 - அதிர்ஷ்ட தேவதையின் அருள் யாருக்கு?

Today Horoscope Predictions in Tamil: புதன்கிழமையான இன்றைய தினம் மீனாட்சி அம்மன் அருள் நிறைந்த நாள். இன்றைய தினம் சந்திரன் கன்னி ராசியில் பயணத்தை தொடங்குகிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Sep 4, 2024 - 05:52
Sep 4, 2024 - 14:53
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் செப்டம்பர் 4 -  அதிர்ஷ்ட தேவதையின் அருள் யாருக்கு?
today rasi palan 2024


Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 19ஆம் நாள் செப்டம்பர் 04ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிரதமை திதி காலை 09.47 மணி வரை அதன்பின் துவிதியை திதி. உத்திரம் நட்சத்திரம் முழுநாள். இன்று சந்திரபகவான் அருளினாலும் சந்திரன் பயணத்தாலும் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 


மேஷம்

இன்றைய தினம் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். 

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் சீரான நிதி நிலைமை இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை நீங்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் நன்மைகள் நடைபெறும். 

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வரலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைய வாய்ப்புள்ளதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவைப்படும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். 

கடகம்

இன்று உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். 

சிம்மம்

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று உங்களுக்கு தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். செய்யும் செயல்களில் நிதானம் தேவை. உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.

தனுசு

இன்று  வேலையில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு கூட்டாளிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.

மகரம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சேமிப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கும்பம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மீனம்

இன்று உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow