K U M U D A M   N E W S

தமிழ்நாடு

சென்னையில் சொகுசு கார் விபத்து: அதிவேக சொகுசு கார் மோதி இருவர் பலி!

சென்னை திருவேற்காட்டில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை மடக்கிப்பிடித்து ஆத்திரத்தில் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாதாந்திர மாமூல் கேட்டு அட்டகாசம்; நிறைமாத கர்ப்பிணியின் காதை வெட்டிய கும்பல்!

மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நில அபகரிப்பு வழக்கில் 'ஏர்போர்ட்' மூர்த்தி கைது; நீதிமன்ற காவல் மறுப்பு!

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் ராயப்பேட்டை காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சொத்து தகராறில் தாய் அடித்துக் கொலை.. மகன் வெறிச்செயல்!

சொத்து தகராறில், தாயை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி இளைஞருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு ? என்.ஐ.ஏ. விசாரணை

ஐ.எஸ்.ஐ.எஸ்-உடன் தொடர்பு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை.. விமான சேவைகள் பாதிப்பு!

சென்னையில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் டார்கெட்.. சென்னையில் களமிறங்கியுள்ள கான்பூர் கொள்ளைக் கும்பல்!

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் திருடி வந்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவர் இறந்த சோகத்தில், 8 மாத குழந்தையுடன் பெண் தற்கொலை.. பெரம்பலூரில் சோகம்

கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல், ஒரு பெண் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம்: மயிலாடுதுறையில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை!

மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு உழைப்பை சுரண்டுகிறது- உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

"ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது" என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வக்பு திருத்தச் சட்டம்: சில விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

வக்பு திருத்தச் சட்டத்தில் முக்கிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

அண்ணாமலை மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சமூக ஆர்வலர் புகார்!

அண்ணாமலை தனது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, நிதி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார்" என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Heavy Rain: தருமபுரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் தொடர்பு இல்லை'- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"அரசின் திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் செப்.20 வரை மழை நீடிக்கும்.. 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"சிலர் எதையும் தெரிந்து கொள்ளாமல் மலிவான அரசியல் செய்கின்றனர்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்குச் சுழற்சி காரணமாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு!

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகளின் காதலனைத் தாக்கிய முன்னாள் பாஜக நிர்வாகி.. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சென்னை அயனாவரத்தில் மகளின் காதலன் சந்திக்க வரும்போது தாக்குதல் நடத்திய முன்னாள் பாஜக நிர்வாகியான தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்

திருச்சி மண் ஒரு திருப்புமுனையாக அமையும் - தொண்டர்கள் மத்தியில் விஜய் பரப்புரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியிலிருந்து இன்று தொடங்கினார். அப்போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தல், ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி பெயரைப் பயன்படுத்தி மோசடி: இரிடியம் மோசடியில் 30 பேர் கைது!

ரிசர்வ் வங்கியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, இரிடியம் விற்பனை மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாகக் கூறிப் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 30 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு அவதூறு வீடியோ: பாஜக, தவெக ரசிகர்கள் மீது வழக்கு!

சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.

கோவை விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்! - கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது!

கோவை விமான நிலையத்தில் பல்வேறு வகையான சிகரெட்டுகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட லேப்டாப்புகள், மைக்ரோபோன்கள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யபட்டனர்.

ஆதியோகி முன்னாடி ஈஷா கிராமோத்சவம் பைனல்ஸ் விளையாட ஆசை - கூக்கால் கிராமத்து இளைஞரின் கனவு!

கூக்கால் கிராமம், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமான இடம். சுற்றுலா சார்ந்த தகவல்களையும் பயண அனுபவங்களையும் புது இடங்களையும் பகிரும் ‘டிராவல் வீ-லாகர்ஸ்’ மூலம் இந்த கிராமம் பிரபலமானது. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் கூக்கால் கிராமத்து இளைஞரின் ஆசையை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.