காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே கடல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் என்ற மூதாட்டி கணவனை இழந்து திருமண வயதில் பெண்ணுடன் குடிசை வீட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். இவர் வசிக்கும் நிலம் மந்தைவெளி என்னும் அரசுக்கு சொந்தமான நிலத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
புதிய வீடு இடித்து அகற்றம்
இந்நிலையில் அமிர்தம் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிசை வீடு முற்றிலுமாக சேதம் அடைந்திருந்ததால் கடன்பெற்று தனது குடிசையை அகற்றி ஹாலோ பிளாக் கல் வைத்து சிறிய வீடு ஒன்று கட்டும் பணிகள் நடைபெற்றது. இதனால் கடந்த சில நாட்களுக்கு வீட்டு வாசலில் கால் நடும் பணி நடைபெற்றது. அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் ஆதரவு இல்லாமல் அந்த பகுதியில் வீடு கட்டி வருவதாக கூறி, தூண்டுதலின்பேரில் அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் ஜேசிபி இயந்திரத்துடன் வருகை தந்து முன்னறிவிப்பு இல்லாமல் இந்த வீட்டை முற்றிலுமாக இடித்து தகர்த்துள்ளனர்.
மேலும் இரண்டு பெண்களையும் அதிகாரிகள் தகாத வார்த்தையில் திட்டியும், கைது செய்து வேலூர் சிறையில் அடைப்பேன் என்று மிரட்டையும் உள்ளனர். மேலும் அப்பகுதி மீண்டும் வீடு கட்டும் பணி தொடங்கக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் கடந்த சில தினங்களாக வீடு இல்லாமல் அமிர்தம் மற்றும் அவருடைய பெண் கல்பனா ஆகியோர் சாலையிலேயே படுத்து உறங்கி வருகின்றனர்.
பொதுமக்களுடன் போராட்டம்
இதனை கண்ட பகுதி மக்கள் இவர்களுக்கு ஆதரவாக இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராமத்தினர் ஒன்றிணைந்து முற்றுகையிட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே இந்த பகுதியில் பட்டா இல்லாமல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியுள்ள நிலையில் கடன் வாங்கி கட்டிய எனது சிறிய வீட்டை இடித்ததால், நானும் என் மகளும் சாலையில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எனது வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரி கிராம மக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகையிட முயற்சி
கணவனை இழந்து தனது மகளுடன் தவித்து வரும் பெண்ணின் வீட்டை இடித்து அகற்றியதால் கிராம மக்கள் இணைந்து மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.