ரூ.200 கோடி வங்கி மோசடி வழக்கு-சென்னையில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
பிரபல பெண் அரசியல்வாதியின் பினாமி நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது
பிரபல பெண் அரசியல்வாதியின் பினாமி நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது
பல கோடி மதிப்புள்ள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தனது மகன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில், ராமநாதபுரம் போலீசாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லையென அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பலத்த சூறைக்காற்று மழை பெய்ததால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டம், காலியிடங்களை நிரப்புதல், அடிக்கடி தேர்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் ஓட்டுநர் மயக்கமடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மறைந்த தலைவர்களின் பெயர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக அறிவுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மத்திய வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 45,41,000 மோசடி செய்த வழக்கில், பினகாஷ் எர்னஸ்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி வான்மதியைத் போலீசார் தேடி வருகின்றனர்.
வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.
சீர்காழி மருத்துவமனையில் நடுக்கம் ஏற்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் உடல்நிலை சீராக இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் துறை வாரியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 256 அறிவிப்புகளை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தப்பி ஓடியபோது தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தகவல்
திமுக முப்பெரும் விழாவை முடித்துவிட்டு அதிவேகத்தில் வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
சுங்கச்சாவடி நெடுஞ்சாலை ரோந்து பணியாளர்களின் உதவியுடன் பேருந்து அவசர கால வழியில் இறங்கி பயணிகள் உயிர்தப்பினர்
அதிமுகவே வெற்றிபெறும் என்று தென்காசியில் ராஜேந்திர பாலாஜி பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக நகர கழகத் துணைச் செயலாளர் பேசியதால் பரபரப்பு
கட்சி பொறுப்பு வழங்கியது தொட்ரபாக கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
திருமண நாடகமாடி இரண்டரை கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி குற்றச்சாட்டு
வாணியம்பாடி அருகே மேய்ச்சலில் இருந்த ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க.வின் முப்பெரும் விழாவுக்குக் கரூர் சென்ற தனியார் பேருந்துகளால், கோவை மாநகரில் இன்று பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து ஒன்றின் ஓட்டுநரும், நடத்துநரும் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஆளுநர் மாளிகை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் அருகே கங்கர்செவல் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.