சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 அப்பாவிகள் உயிரிழந்தது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்ததுடன், இந்தச் சம்பவத்துக்கு தவெக நிர்வாகிகளின் குளறுபடிகளே காரணம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக நிர்வாகிகளின் திட்டமிடல் குறைபாடு:
கரூரில் உள்ள வேலாயுத பாளையத்தில் தவெக தலைவர் விஜய் கூட்டிய கூட்டத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. நான் எத்தனையோ பெரும் கூட்டங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்த இந்தக்கூட்டம் சரியான முறையான திட்டமிடல் இல்லை. போலீசார் அறிவுறுத்தலின் படி நிகழ்ச்சி நடத்தி இருந்தால் இது போன்ற கொடுந்துயர் நடந்து இருக்காது.
பத்தாயிரம் கூடும் இடத்தில் முப்பது, நாற்பது ஆயிரம் மக்களை ஒரே இடத்தில் கூட வைப்பது என்பது பெரும் தவறு. இதை காவல்துறை சுட்டிக் காட்டியும் அவர்கள் திருத்திக் கொள்ளவில்லை. இந்தத் துயரச் சம்பவம் தவெக நிர்வாகிகள் நடத்திய முறையற்ற செயல்பாடுகளால் தான் நடந்துள்ளது. இதற்கு அரசையும் போலீசையும் குற்றம் சொல்லுவது தவறு.
கரூர் துயரத்தின் தாக்கம்:
அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவிகள் உயிரிழந்த சோகம் என் மனம் ஏற்க மறுக்கிறது. இந்தத் துயர சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் இறப்பு என்பது ஏற்புடையது இல்லை.
நான் கரூர் சென்று அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூற முயன்றேன். ஆனால் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அச்சம்பவத்தை நினைத்தாலே மனசு பதைபதைக்கிறது, பேசக்கூட முடியவில்லை.
அரசின் நடவடிக்கை சரியே:
அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டை வரவேற்றுப் பேசிய வைகோ, "தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தது நல்லது. அங்கே அரசு விரைந்து செயல்பட்டது. இதுபோன்று நடவடிக்கை எந்த அரசும் எடுக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தனி நபர் விசாரணை குழு அறிவித்து நடவடிக்கை மேற்கொண்டது வரவேற்கிறேன். போலீசாரும் உரிய நடவடிக்கை எடுப்பது சரியே. இதில் தவெக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் காவல்துறை கைது செய்து இருப்பது சட்ட நடவடிக்கை. இதில் யார் தவறு செய்தாலும் குற்றமே.
விஜய் கைது குறித்து:
விஜய் கைது செய்யப்படுவார் என்று எதிர்க்கட்சிகள் கிளப்பும் வதந்திகளுக்கு மறுப்புத் தெரிவித்த வைகோ, தவெக தலைவர் விஜய்யைக் கைது செய்யும் எண்ணம் அரசுக்கும் முதல்வருக்கும் இல்லை; இதனை எதிர்க்கட்சிகள் மக்களிடம் தவறாகக் கூறி வருகின்றனர்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.