தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் நகர் பகுதியைச் சேர்ந்த திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் என்பவர், தனது நண்பரிடம் ரூ.85 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததுடன், மிரட்டல் விடுத்ததாக அவர் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மோசடி மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டு:
காரிமங்கலத்தைச் சேர்ந்த மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன், அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வரும் தனது நண்பரான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடன் கொடுக்கப்பட்ட விவரம்:
கடந்த 2015 ஆம் ஆண்டு, அன்பழகன் தனது நண்பர் பாலச்சந்திரனிடம் முதலில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக ஜவுளி வாங்குவதற்காக மீண்டும் ரூ.20 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். இதில் ரூ.15 லட்சத்தைத் திருப்பிச் செலுத்திவிட்டு, மீதி ரூ.10 லட்சத்துக்காக, தனது மனைவி தீபா பெயரில் இருந்த 21 சென்ட் நிலத்தை பாலச்சந்திரனுக்கு அன்பழகன் கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
இதற்குப் பிறகு, காரிமங்கலம் மற்றும் காவேரிப்பட்டினம் பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளுக்குப் புதிய சரக்குகளை வாங்குவதற்காக, பாலச்சந்திரன் தனது 3 நண்பர்களிடம் வாங்கி ரூ.75 லட்சத்தைக் கடனாகக் கேட்டுள்ளார். இந்த ரூ.75 லட்சத்தையும் அன்பழகன் மற்றும் அவரது மனைவி தீபா இருவரும் பாலச்சந்திரனுக்குப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு வாங்கிச் சென்றுள்ளனர்.
காசோலை ஏமாற்றம் மற்றும் மிரட்டல்:
இந்நிலையில், அன்பழகனிடம் அசல் மற்றும் வட்டி தொகையைக் கேட்டபோது, அவர் வழங்கிய பல்லவன் கிராம வங்கி காசோலை, வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்துள்ளது.
அன்பழகன் பணம் மற்றும் வட்டியை எதுவும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலச்சந்திரன், தான் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பணம் மற்றும் தங்க நகைகளை வைத்து, அன்பழகனுக்காக வாங்கியிருந்த ரூ.75 லட்சம் கடனைச் சேர்த்து மொத்தம் ரூ.85 லட்சம் கடனைத் திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனாலும், அன்பழகன் பணம் கேட்டால் தகாத வார்த்தைகளில் திட்டுவதுடன், நான் ஆளுங்கட்சியின் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறேன். என்னை எதிர்த்தால் ஆளை வைத்து கொலை செய்து விடுவேன என மிரட்டுவதாகவும், பணம் கொடுக்க முடியாது; எங்க வேண்டும் என்றாலும் புகார் கொடுத்துக்கோ எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாலச்சந்திரன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்பி அலுவலகத்தில் மனு:
இந்த மிரட்டல்கள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பாலச்சந்திரன், இன்று (செப். 30, 2025) தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை மிரட்டும் திமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது நடவடிக்கை எடுத்து, தனது ரூ.85 இலட்சம் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.