சென்னை வானிலை மையம் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வந்தது.இந்த நிலையில் மாலையில் திடீரென சூழ்ந்த இருள் மேகங்களால் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
வெளுத்து வாங்கிய கனமழை
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள், செவிலிமேடு, ஓரிக்கை, ஒலி முகமது பேட்டை, சிறுகாவேரிப்பாக்கம், கீழம்பி, தாமல், பாலுசெட்டி சத்திரம், காரை, ஏனாத்தூர், களியனூர், நத்தப்பேட்டை, தேனம்பாக்கம், களக்காட்டூர், குருவிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
திடீர் மழையின் காரணமாகவும், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பல்வேறு பணிகளுக்காக வெளியில் சென்ற பொதுமக்களும், பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளும், சிரமம் அடைந்தனர்.
மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
இதேபோல் திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேங்கிக்கால், அடிஅண்ணாமலை, ஆடையூர், அத்தியந்தல், தேனிமலை, சிறுபாக்கம், எடப்பாளையம், கீழ்சிறுபாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கத்தில் சிரமப்பட்ட மக்கள் இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் குளிர்ந்த காற்று வீசுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சத்துவாச்சாரி, புதிய பேருந்து நிலையம், வேலப்பாடி, பாகாயம், அடுக்கம்பாறை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.