தமிழ்நாடு

திமுக கூட்டணி அரசு பல மாநிலங்களுக்கு முன் மாதிரி அரசாக இருக்கிறது- திருமாவளவன்

பல மாநிலங்கள் பின்பற்ற கூடிய அளவிற்கு திமுக தலைமையிலான கூட்டணி சாதனை படைக்கும் என திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

திமுக கூட்டணி அரசு  பல மாநிலங்களுக்கு முன் மாதிரி அரசாக இருக்கிறது- திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் கலந்துக்கொண்டு தமிழ்நாட்டின் கல்வி திட்டங்களை நடைமுறைப்படுவேன் என கூறி உள்ளார்.

தமிழ்நாடு கல்வி வளர்ச்சி

இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு பல மாநிலங்களுக்கு முன் மாதிரி அரசாக இருக்கிறது. இது தான் திராவிட மாடல் என்று நம்முடைய முதல்வர் அவ்வப்போது கூறி வந்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில் ரேவந்த் ரெட்டியின் உரை அமைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டுகள். தெலங்கானா முதல்வருக்கு வாழ்த்துகள்.

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு கல்வி உள்ளிட்ட பல தளங்களில் வளர்ச்சி அடைந்து உள்ளது.ஆதனால் தான் பிற மாநிலங்கள் நம்முடைய மாநிலத்தை பின்பற்றும் நிலை வந்திருப்பதை யாரும் மறுக்க இயலாது.

திமுக கூட்டணி சாதிக்கும்

மருத்துவ கல்வி, உயர் கல்வி துறைகளில் தமிழ்நாடு உயர்ந்த இடத்தில் இருக்கிறது. பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டை நோக்கி படை எடுத்து வரும் சூழல் வந்திருக்கிறது. அதுப்போல் இன்னும் பல சாதனைகளை படைக்க கூடிய அளவிற்கு பல மாநிலங்கள் பின்பற்ற கூடிய அளவிற்கு தமிழ்நாடு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மூலம் சாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மக்களின் பேரதரவு இந்த கூட்டணிக்கு பல தேர்தல்கள் மூலம் கிடைத்து இருக்கிறது.

முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட கூடிய கட்சிகள் திமுக, அதிமுக, புதிதாக உள்ள தவெக தான். இப்போது தேர்தல் பணியை தொடங்கி உள்ளார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க கூடிய கட்சி. அதே நேரத்தில் தனித்து இயங்க கூடிய வலிமையுடன் உள்ளோம். அந்த தனித்துவம் பாதிக்கப்படாத வகையில் கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்துவதில் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றோம். நவம்பர் மாதத்திற்குள் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு களப்பணியை தொடங்குவோம்” என தெரிவித்தார்.